உங்க வீடு தேடி 'வீடியோகாலில் டாக்டர் வருகிறார்! 'இலவசமாக சிகிச்சை தருகிறார் !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

07 ஏப்
2020
00:51
பதிவு செய்த நாள்
ஏப் 07,2020 00:50

கோவை:பல்வேறு உடற்கோளாறுகளுடன், மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படும் நோயாளிகள், இனி கவலைப்பட வேண்டாம். 'வீடியோ கால்' வாயிலாக, டாக்டரிடம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.உலகை அச்சுறுத்தி வரும், கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.


இதனால், கொரோனா அறிகுறி தவிர்த்த, பிற உபாதைகளுக்கும் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.ஊரகப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறிய மருத்துவமனைகள், கிளினிக்குகளில், சிகிச்சை அளிக்காத நிலையில், உடல் உபாதைகளுடன் இருப்போர் பாடு, பெரும் திண்டாட்டம் ஆகி விட்டது.இவர்களுக்கு வரப்பிர சாதமாக, கோவையில், 'டாக்டர் ஆன் கால்' எனப்படும், சேவை தொடங்கப்பட்டுள்ளது. டாக்டருடன் வீடியோ கால் அழைப்பில் பேசி, மருத்துவ ஆலோசனை பெற முடியும் என்பதுதான், இதன் சிறப்பு அம்சம்.


டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:வீட்டில் இருந்து, மருத்துவமனைக்கு வர முடியாமல் இருக்கும் நோயாளிகளுக்கு, மருத்துவ சேவை அளிப்பதே, இதன் நோக்கம்.


இந்த சேவை பெறுவதற்கு, https://doctoroncall.ml/ இணையதளம் மூலம் நோயாளிகள், மருத்துவமனையை தொடர்பு கொண்டு, விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்தால், டாக்டர் 'வீடியோ கால்' வாயிலாக, நோயாளியை அழைத்துப் பேசி, சிகிச்சை பற்றி முடிவு செய்வார்.இந்த இணையதளத்தில், அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும், மருத்துவமனைகளையும் இணைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.


'டெலிமெடிசின்' தொடர்பாக, இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த இணையதளம் மூலம், சிகிச்சை அளிக்கப்படுகிறது.நோயாளியுடன் கலந்துரையாடும் டாக்டர் அளிக்கும் பிரிஸ்கிரிப்ஷன், நோயாளியின் இ-மெயில் அல்லது மொபைல் போனுக்கு, அனுப்பி வைக்கப்படும்.அவர் மருந்துக்கடைகளில், மருந்து வாங்கிக்கொள்ள முடியும். கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும் வரை, இந்த சேவை இலவசமாக வழங்கப்படும்.இவ்வாறு, டாக்டர் செந்தில் குமார் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஏப்-202016:15:23 IST Report Abuse
ஆப்பு நேரா போனாலே கவனிப்பு சூப்பரா இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X