| கத்தரிக்காய் விலை; விவசாயிகள் கவலை Dinamalar
கத்தரிக்காய் விலை; விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
01:03

திருப்பூர்:திருப்பூர், பொங்கலுார், பல்லடம் சுற்றுப்பகுதியில், காய்கறி சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. கீரை, கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலை போன்ற காய்கறி சாகுபடியை விவசாயிகள் விரும்புகின்றனர். அதிகம் செலவில்லாத கத்தரி சாகுபடி, நீடித்த வருவாய் அளித்து வந்தது.கத்தரி நாற்றுக்களை, 70 பைசா என்ற விலைக்கு வாங்கிவந்து நடவு செய்கின்றனர். நடவு செய்த, மூன்றாவது மாதத்தில் இருந்து, கத்தரி அறுவடை துவங்குகிறது.செடி நோய் தாக்காமல் இருந்தால், நான்கு மாதங்கள் அறுவடை செய்யலாம். நோய் விழுந்தால், இரண்டரை மாதங்களில் செடி பட்டுப்போகிறது. கொரோனா வைரஸ் தொற்றால், கத்தரி காய் பறிக்கும் பணி, சில நாட்கள் நின்று போயிருந்தது. விவசாய பணிக்கான தடை விலகிய பிறகும் ஆட்கள் வராததால், விவசாயிகளே காய் பறித்து, சந்தைக்கு எடுத்து செல்கின்றனர்.கொரோனாவுக்கு முன், 60 ரூபாய் முதல், 80 வரை, ஒரு கிலோ கத்தரி விற்கப்பட்டது. தற்போது, விவசாயிகளே பாடுபட்டு சந்தைக்கு எடுத்து வருகின்றனர். ஆனால், விலை குறைந்துவிட்டது.தற்போது, கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுவதால், போக்குவரத்துக்கே கட்டாது என, விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.கத்தரி விவசாயிகள் சிலர் கூறியதாவது:கத்தரி செடியில் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறது; காய் பிடித்த பிறகும், புழு பிடித்து விடுகிறது. எனவே, கத்தரி செடிக்கு, தரமான உரம் மற்றும் இயற்கையான பூச்சி மருந்துகள், மானிய விலையில் வழங்க வேண்டும். செடி வளரும் பருவம், பூக்கும் பருவம் வரை நோய் தாக்காமல் வளர்த்துவிட்டால், நான்கு மாதங்கள் அறுவடை செய்ய முடியும்.எனவே, தோட்டக்கலைத்துறை மூலமாக, கத்தரி சாகுபடிக்கான உரம் மற்றும் மருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும். திடீர் விலை சரிவால் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படி ஆகாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X