வாடகையின்றி டிராக்டர் பயன்படுத்தலாம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
01:46

ஆனைமலை:கோவை மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு, 90 நாட்களுக்கு வாடகையின்றி டிராக்டர் மற்றும் இதர கருவிகள் வழங்க, வேளாண்துறை திட்டமிட்டு உள்ளது. பதிவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி அறிக்கை:கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு உதவுவதற்காக, உரக்கடைகள், வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்படுகிறது.ஊரடங்கால் சிறு, குறு விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, தமிழக அரசு மற்றும் 'டாபே' நிறுவனத்தின் 'ஜெ பார்ம்' உடன் இணைந்து, 90 நாட்களுக்கு வாடகையின்றி டிராக்டர் மற்றும், இதர வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளது.'உழவன்' செயலியில் உள்ள, 'வேளாண் இயந்திர வாடகை மையம்' என்ற 'ஆப்ஷனில்' தேவைப்படும் வேளாண் கருவிகளை தேர்வு செய்து, தங்களின் இடம், இயந்திரம் தேவைப்படும் நேரம், தேதியை தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம்.அல்லது, 'டாபே' நிறுவனத்தின் 'ஜெ பார்ம்' சேவை மையத்தின், 1800 4200 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது, 74487 79909 என்ற எண்ணில் 'ஜெ பார்ம்' கள அலுவலரின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.சிறு, குறு விவசாயிகள், இத்திட்டத்தில் பதிவு செய்து, பண்ணைக்கருவிகள், இயந்திரங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். 'உழவன்' செயலி மூலம் பதிவு செய்தால், எளிதாக முன்பதிவாகும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X