ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் உதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
01:47

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் கூலித்தொழிலாளர்கள், ஆதரவற்றோருக்கு உணவு அளிக்க தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.பொள்ளாச்சியில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து, தன்னார்வலர்கள் தனியாகவும், வருவாய்துறையுடன் இணைந்தும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.பொள்ளாச்சி சி.டி.சி., மேடு பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, ஊரடங்கு முடியும் வரை தன்னார்வலர் சுதாகர் உணவு வழங்குகிறார்.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உணவு வழங்கினார். சப் - கலெக்டர் வைத்திநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் சார்பில், வடுகபாளையம் பகுதியில் உள்ள மக்களுக்கு, தலா ஐந்து கிலோ அரிசி வழங்கப்பட்டது.சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, பொள்ளாச்சி பிரின்ஸ் லயன்ஸ் சங்க தலைவர் செல்வராஜ், சேவாலயம் செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் உணவு வழங்குகின்றனர். பணியில் உள்ள போலீசாருக்கு காலை உணவு, மோர், டீ, சுக்கு காபி வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பில், துாய்மை பணியாளர்கள், போலீசார், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் ரோட்டோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, தேநீர், பிஸ்கட், வாட்டர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகிறது.கருமாண்டகவுண்டனுாரை சேர்ந்த சிவகாமி, 25 கூலித்தொழிலாளர் குடும்பங்களுக்கு, 2,000 ரூபாய் மதிப்பில், 10 கிலோ அரிசி, மூன்று கிலோ சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருட்களை சிவகாமி வழங்கி உதவினார்.பொள்ளாச்சி ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளை சார்பாக, ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது. கூலி வேலைக்கு செல்வோருக்கு உதவ அறக்கட்டளைக்கு, இந்திய மருத்துவ சங்கம் சார்பில், 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202006:04:24 IST Report Abuse
Ram pollachi தெருவை சமயலறை ஆக்கிவிட்டு வீட்டை விட்டு வராதே என்றால் வயறு நிறையுமா? சீன வைரசும் மறையுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X