| தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் ஆய்வு: 50 நபர்களுக்கு கெடுபிடி தளர்வு Dinamalar
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் ஆய்வு: 50 நபர்களுக்கு கெடுபிடி தளர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
03:17

சிங்கம்புணரி:சிங்கம்புணரி ஒன்றியத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமை படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



சிங்கம்புணரி ஒன்றியத்தில் 148 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர். இவர்களை சோதனை செய்து 28 நாட்கள் தனிமையில் இருக்க உத்தரவிட்டும், அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது. சிலருக்கு 28 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று தாசில்தார் பஞ்சவர்ணம், வட்டார தலைமை மருத்துவர் நபிஷா பானு, தனி வட்டாட்சியர் செல்வராணி, காவல்துறை ஆய்வாளர் சத்திய ஷீலா ஆகியோர் தலைமையில் அவர்களின் வீடுகளை ஆய்வு செய்து, காய்ச்சல், சளி போன்ற அறிகுறி சோதனை செய்யப்பட்டது.



இதில் எந்த வைரஸ் பரவல் அறிகுறி இல்லாததால் 28 நாட்கள் தனிமையில் இருந்த 50 பேரின் கெடுபிடி தளர்த்தப்பட்டுள்ளது.ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், மருத்துவர்கள் செந்தில்குமார், பரணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், சுகாதார ஆய்வாளர்கள் மதியரசு பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X