நகரில் மாசு அடங்கியது 3 மடங்கு சுத்தமான ஊராச்சு! காரணம், கொரோனாவின் ஊரடங்கு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 ஏப்
2020
01:17
பதிவு செய்த நாள்
ஏப் 08,2020 00:44

கோவை:கொரோனா வைரஸ் பீதி ஒரு பக்கம் கெடுதலாக இருந்தாலும், மறுபக்கம் காற்றில் மாசு அளவு, 'வெரிகுட்' என சொல்லுமளவுக்கு, மூன்று மடங்கு குறைந்துள்ளது.அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ, அடிப்படையான சுவாசக் காற்றில் ஆக்சிஜன், நைட்ரஜன் உள்ளிட்ட வாயுக்கள் கலந்துள்ளன. இந்த காற்று, வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகை கலப்பதால், துாய்மை தன்மையை இழக்கிறது.


இதனால், சுவாச நோய்கள், புற்றுநோய் என பலதரப்பட்ட பாதிப்புகளுடன், 'ஓசோன்' படலத்துக்கும் பாதகம் ஏற்படுகிறது. தற்போது, கொரோனா கோரதாண்டவம் மனித வாழ்க்கையை முடக்கியிருக்க, மறுபுறம், தான் இழந்த அழகை இயற்கை திரும்ப பெற்று வருகிறது.மூன்று மடங்கு குறைவு!ஊரடங்கு உத்தரவால், தொழிற்சாலைகள் நிறுத்தம், வாகன புகை குறைவு உள்ளிட்டவற்றால் நிலம், நீர், காற்று மாசுபாடு குறைந்து வருகிறது. தொழில் நகரான கோவையில் காற்று மாசுபாடின் அளவு முன்பு இருந்ததை விட, மூன்று மடங்கு குறைந்திருப்பதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:காற்றில் சுவாசிக்கக்கூடிய துகள்களின் வரையறுக்கப்பட்ட அளவு, 100 'மைக்ரோ கிராம் பார் மீட்டர் கியூபிக்' எனப்படுகிறது. ஊரடங்குக்கு முன்பு, 'சிட்கோ' தொழிற்பேட்டை பகுதியில், இத்துகள்களின் அளவு, 60 - 70 வரை இருந்தது; கடந்த, 25ம் தேதி முதல் தற்போது வரை, 20 - 30 ஆக குறைந்துள்ளது.மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை ஒட்டிய வணிக பகுதியில், 70 - 80 வரை இருந்த அளவு தற்போது, 40 ஆகவும், குடியிருப்புகள் மிக்க கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்த, 50 - 55 வரையிலான அளவு, 24 ஆகவும் குறைந்துள்ளது.


திருப்தியில் இருந்து 'குட்'காற்றில் கலந்திருக்கும் சல்பர் டை ஆக்சைடு அளவு, 20ல் இருந்து, 7 ஆகவும், நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு, 60ல் இருந்து, 20 ஆகவும் என பல்வேறு வாயுக்களின் அளவு குறைந்துள்ளது. ஊரடங்குக்கு முன்பு காற்றின் தரம், 'திருப்தி'(சேட்டிஸ்பேக்டரி) என்ற நிலையில் இருந்து, தற்போது 'நன்று'(குட்) என்ற நிலையை பெற்றுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.ஊரடங்குக்கு முன்பு, 'சிட்கோ' தொழிற்பேட்டை பகுதியில், இத்துகள்களின் அளவு, 60 - 70 வரை இருந்தது; கடந்த, 25ம் தேதி முதல் தற்போது வரை, 20 - 30 ஆக குறைந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvan - Rishikesh,இந்தியா
08-ஏப்-202004:30:40 IST Report Abuse
Duruvan G ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X