பசி போக்கும் பணியில் ஆசிரியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
01:09

சோழிங்கநல்லுார், எலன் சர்மா நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், தினமும், 300 பேருக்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



பள்ளியில் பணி புரியும், ஆசிரியர்கள், ஊழியர்கள் சேர்ந்து சமையல் செய்கின்றனர். வெஜ் பிரியாணி, லெமன் சாதம், தயிர் சாதம் என, ஒவ்வொரு நாளும், 300 பேருக்கு உணவு வழங்குகின்றனர். இந்த சேவை, நேற்று முதல் துவங்கியது.இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆரில் பணிபுரியும், மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் மற்றும் சாலை ஓரம் வசிப்போருக்கு உணவு வழங்குகின்றனர். ஊரடங்கு முடியும் வரை, உணவு வழங்கப்படும் என, பள்ளி மேலாளர் சங்கர் கூறினார்.




கைத்தாங்கும் சங்கம்



வேளச்சேரி: டான்சிநகர் நலவாழ்வு சங்கம் சார்பில், ஊரடங்கு துவங்கிய நாள் முதல், வேளச்சேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, காலை உணவு வழங்குகின்றனர். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினர்.அது போல, வேளச்சேரி கட்டப்பொம்மன் நண்பர்கள் சங்கம் சார்பில், பொதுமக்களுக்கு, கபசுர குடிநீர், கிருமி நாசினி, முக கவசம் வழங்கப்பட்டது.



மேலும், வேளச்சேரி இந்து பரிபாலன் அறக்கட்டளை சார்பில், வேளச்சேரி குருநானக் கல்லுாரியில் தங்கி உள்ள, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு, பிஸ்கெட், சோப்பு வழங்கப்பட்டது.



உதவிய, 'பேஸ்புக்'



எண்ணுார்: எண்ணுார், பர்மா நகரைச் சேர்ந்த, மீனா மற்றும் சுந்தரி குடும்பத்தினர், ஊரடங்கால் கடுமையாக பாதித்துள்ளதாகவும், தினமும் உணவிற்காக கடும் சிரமம் அடைந்து உள்ளனர். இதை பெண் ஒருவர், முகநுாலில் பதிவிட்டு இருந்தார்.



அதை கவனித்த, திருவொற்றியூர், தி.மு.க., மேற்கு பகுதி இளைஞரணியினர், பர்மா நகர், முதலாவது தெருவில் வசிக்கும், மீனா மற்றும் சுந்தரி குடும்பத்தினர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த, 1-0க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, வெங்காயம், தக்காளி, முட்டை, பிஸ்கட், காய்கறிகள் போன்றவற்றை தள்ளுவண்டியில் எடுத்து சென்று, வினியோகம் செய்தனர். கொரோனா நோய் தடுப்பாக, முக கவசங்களும் வழங்கப்பட்டன.



24,000 பேருக்கு உணவு



சென்னை: தெற்கு ரயில்வேயில், ஆறு ரயில்வே கோட்டங்களிலும், ஆதரவற்றோருக்கு, இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யால், தினமும், 24 ஆயிரம் பேருக்கு, இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 14ம் தேதி வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி கூறியதாவது:ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சார்பில், உணவு தயாரித்து, ரயில்வே பாதுகாப்பு படையினரால், ஆதரவற்றோருக்கு வழங்கப்படுகிறது. நான்கு நாட்களாக, உணவு வழங்கும் பணி தொடர்கிறது. தெற்கு ரயில்வேயில் உள்ள, ஆறு ரயில்வே மண்டலங்களிலும், தினமும், 24 ஆயிரம் பேருக்கு, உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்Iடு இருந்தாலும், மேலும், கூடுதலாக உணவு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், உணவு தயாரித்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



அன்னமிட்ட வீரர்கள்



செங்குன்றம்: செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தினர், வழக்கமான தீயணைப்பு மற்றும் கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு பணிகளுடன், தினமும், 50 பேருக்கு மதியம் உணவு சமைத்து தருகின்றனர். அதற்காக, காலை, 10:00 மணிக்கு சமையல் வேலையை துவங்கி விடுகின்றனர். சமையல் முடிந்ததும், வாழை இலையில் உணவை பார்சல் செய்கின்றனர். மதியம், 12:00 மணி அளவில், நிலையத்தை தேடி வரும் ஏழை மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்குவதோடு, ஆங்காங்கே உள்ள முதியோருக்கும், தேடிச் சென்று உணவு வழங்குகின்றனர்.



மேலும், நிலைய அலுவலர் தேவராஜன், தன் வீட்டில் தயாரித்த, முக கவசத்தையும், அவர்களுக்கு அணிவித்து விடுகிறார்.



பாராட்டு



கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ராஜா, தினமும், ஆதரவற்றோர், வெளிமாநில ஊழியர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என, 300 பேருக்கு மூன்று வேளை உணவு வழங்கி வருகிறார். வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு வழங்கி வருகிறார். உதவி கமிஷனரின் இச்செயலை, காவல் வட்டாரத்தில் உள்ளவர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



இலவச காய்கறி



புரசைவாக்கம்: புரசைவாக்கம் பகுதியில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள், 500 பேருக்கு, இலவசமாக அரிசி, காய்கறிகளை, தி.மு.க., அண்ணாநகர் வடக்கு பகுதி செயலர் பரமசிவம் நேற்று வழங்கினார்.


- நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X