| போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வங்கி ஊழியர்கள் கோரிக்கை Dinamalar
போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வங்கி ஊழியர்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
01:15

சென்னை:வங்கிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், அலுவலகத்திற்கு செல்லும் நேரங்களில், போலீசார் கடுமையாக நடந்து கொள்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.



கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற, அத்தியாவசிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததால், இவற்றில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலகம் வர சிரமப்படுகின்றனர்.



ஊழியர்கள் இணைந்து, ஆட்டோ பிடித்து வந்தாலும், போலீசார் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக, புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, வங்கி பெண் ஊழியர்கள் கூறியதாவது:நாங்கள் பொதுத் துறை வங்கிகளில் பணிபுரிகிறோம். வங்கிகள், பெரிய மேடு, எழும்பூர் என, சென்னை நகருக்குள் அமைந்துள்ளன.



எங்களது வீடுகள், பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம் போன்ற பகுதிகள் உள்ளன. 144 தடை உத்தரவால், பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் இல்லை.இதனால், வங்கியில் இருந்து கடிதம் மற்றும் வங்கி பெயர் பொருத்தி, குறிப்பிட்ட சில ஆட்டோக்களை வழக்கமாக பிடித்து, வேலைக்கு வருகிறோம். ஆனால், ஆட்டோக்களில் செல்வதால், போலீசார் ஆங்காங்கே நிறுத்தி, மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.



அடையாள அட்டை காண்பித்தாலும், மோசமாக பேசுகின்றனர். நாங்கள் செயல்படவில்லை எனில், யாருக்கும் சம்பளம் கிடைக்காது. ஆனால், எங்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.எனவே, வங்கிஅதிகாரிகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என, போலீசாருக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X