கொரோனா தடுப்பு அதிகாரிகள் அலட்சியம் அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
01:18

சென்னை:தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில், வெளிநாடு சென்று திரும்பியவர்களை தனிமைப்படுத்துவதில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.



வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களை, கொரோனா தொற்று தடுப்புக்காக தனிமைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுதும் தனிமைப்படுத்துதல் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை, தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், ஹன்சா கார்டன் குடியிருப்பில், நான்கு வீடுகளை சேர்ந்த நபர்கள் தனிமைப்படுத்த வேண்டிய பட்டியலில் உள்ளனர்.



இவர்கள் குறித்து தகவலறிந்து, வருவாய் துறை ஊழியர் ஒருவர் நேரில் வந்து, அடையாள, 'நோட்டீஸ்' ஒட்டினார்.இவர்களில் இரண்டு பேர், அந்த முகவரியில் இல்லை என்பதால், அங்கு தனிமைப்படுத்துதல் அறிவிப்பு ஒட்டப்படவில்லை. மூன்றாவதாக ஒரு வீட்டில் இருப்பவர், 'பெயர், முகவரி அனைத்தும் சரி, ஆனால், நான் வெளிநாடு செல்லவில்லை' என்று கூறி, வருவாய் துறை ஊழியரை திருப்பி அனுப்பி விட்டார்.



நான்காவதாக ஒரு வீட்டில், கணவன், மனைவி இருவரும் மார்ச், 8ல் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். ஆனால், மனைவி பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டு, தனிமைப்படுத்துதல், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.அவரது கணவர், வழக்கம் போல் வெளியில் சுற்றி வருகிறார். ஒரே நாள், ஒரே நேரத்தில் வந்த இருவரில், ஒருவர் மட்டுமே தனிமை படுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்களில் சிலர், வழக்கம்போல், வெளியே சுற்றித்திரிகின்றனர். இதுகுறித்து தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தனர்.



ஆனால், கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் உரிய பதில் அளிக்க வில்லை. நோட்டீசில் குறிப்பிடப்பட்ட நபர், வெளியில் வந்தால் மட்டும் தெரிவியுங்கள் என்று கூறி, இணைப்பை துண்டித்துவிட்டனர்.இதனால், அந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், இது விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X