ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் சுற்றித் திரிந்த ஆதரவற்றவர்கள், வட மாநில சாதுக்கள், மனநலம் பாதித்தவர்கள் என 160 பேர் மார்ச் 24ல் ஊரடங்கு உத்தரவுக்கு பின் உணவு, குடிநீர், உறைவிடம் இன்றி தவித்தனர்.
பசியில் வாடிய இவர்களை ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல் ஜபார், நகராட்சி கமிஷனர் ராமர் ஆகியோரது ஏற்பாட்டில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நகராட்சி கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டு அம்மா உணவகத்தில் இருந்து உணவு வழங்கினர்.
ராமேஸ்வரம் வந்த கலெக்டர் வீரராகவ ராவ், ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். இவர்களது பராமரிப்பு குறித்து தாசில்தார் அப்துல் ஜபார், நகராட்சி கமிஷனர் ராமர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.