| வங்கிகள் முன் காத்திருந்த வாடிக்கையாளர்கள் Dinamalar
வங்கிகள் முன் காத்திருந்த வாடிக்கையாளர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
02:32

திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் வங்கிகளில் சமூக இடைவெளி இன்றி வாடிக்கையாளர்கள் காத்திருப்பதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.



திருப்புவனத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். அரசு ஓய்வூதியர்கள் பலருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.



கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் வங்கி வாசலில் முதியோர் நீண்ட நேரம் சமூக இடைவெளி இன்றி காத்து கிடக்கின்றனர். ஒரு சில வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அமர நாற்காலி ,ஷாமியானா பந்தல், கை கழுவ தண்ணீர் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வங்கிகளில் இவை வைக்கப்படாததால் வாடிக்கையாளர்கள் அவதிப்ப டுகின்றனர். வங்கியினுள் குறிப்பிட்ட அளவில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதால் மற்றவர்கள் வெயிலில் காத்து கிடக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X