ஊரடங்கு அமல்படுத்தினாலும் மணல் கடத்தல் திருப்புவனம் வட்டாரத்தில் தொடர்கிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
02:40

திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.



திருப்புவனத்தைச் சுற்றியுள்ள மடப்புரம்,லாடனேந்தல், பெத்தானேந்தல், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு மணல் கடத்தப்படுகிறது. இப்பகுதியில் உள்ள வைகை ஆற்றுப்படுகை, கண்மாய், நீர்வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவற்றில் இருந்து மணலை மூட்டையாக கட்டி வைத்து சரக்கு வேன்களில் மதுரை மாவட்டத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது.உள்ளூர் கட்டுமான தேவைகளுக்கும் மணல் விற்பனை செய்யப்படுகிறது.



வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகளில் மணலை குவித்து வைத்தும் கடத்தல் நடைபெறுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால் வாகனங்கள் செல்ல வழியில்லை. மணல் திருட்டு கும்பல் மணலை இருப்பு வைப்பதற்காக இரவில் வாகனங்களில் அள்ளி சேமித்து வருகின்றனர்.



மணல்மேடு, பெத்தானேந்தல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த திருட்டு நடந்து வருகிறது. போலீசார், வருவாய்த்துறையினர் அனைவரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சோதனை சாவடிகள் , பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் மணல் திருட்டு கண்காணிப்பின்றி தடையின்றி நடந்து வருகிறது.



எனவே மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகள், வீடுகள் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X