| கொரோனா பணி ஊழியருக்கு நிவாரணம் Dinamalar
கொரோனா பணி ஊழியருக்கு நிவாரணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
02:51

சிவகங்கை:'கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியருக்கு கருணை நிதியாக ரூ.2 லட்சம் வழங்கும் முதல்வருக்கு நன்றி,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.குமார் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பில் பணிசெய்யும் சுகாதாரம் மற்றும் பல்துறை பணியாளர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தாக்கத்திற்கு ஆளாகும் நிலை நேரிட்டால் அவர்களுக்கு சிறப்பு நிவாரண நிதி வழங்கவேண்டும் என முதல்வர் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தோம்.



இதையடுத்து பாதிப்புக்குள்ளாகும் பணியாளர்களுக்கு அரசு பொறுப்பில் சிகிச்சை அளிப்பதுடன் கருணை நிதியாக ரூ.2லட்சம் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது.இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X