| கர்ப்பிணி, பெண்கள் மருத்துவமனை சென்று வர வாகன வசதி: சுகாதாரத்துறை தகவல் Dinamalar
கர்ப்பிணி, பெண்கள் மருத்துவமனை சென்று வர வாகன வசதி: சுகாதாரத்துறை தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
02:51

சிவகங்கை:கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை சென்று வர அரசே வாகன ஏற்பாடு செய்துள்ளது,'' என சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது,மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி நடக்கிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க, முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். கடைகளில் சமூக இடைவெளி விட்டு நிற்பது அவசியம். கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை எடுக்க , வீட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சென்று வர வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாகன தேவைக்கு வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகலாம். இதற்காக வட்டார மருத்துவ அலுவலர்கள் அலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 108 ஆம்புலன்ஸ், அவசர உதவி எண் 1077யையும் அழைக்கலாம், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X