500 குடும்பங்களுக்கு உணவு பொருள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
01:42

சென்னை:ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, 500 குடும்பங்களுக்கு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு மற்றும் அரிசியை, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று வழங்கினார்.



கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக, மார்ச், 24ம் தேதி முதல், ஏப்., 14ம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக, பாமர மக்கள் உணவிற்கு வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள் என, பலரும் முன்வந்து உதவி வருகின்றனர்.



அந்த வரிசையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், திருவொற்றியூரின் பல பகுதிகளில், தினமும், அரிசி, காய்கறிகளை வழங்கி வருகிறார்.நேற்று காலை, சார்லஸ் நகரைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளை தேர்ந்தெடுத்து, வீடுதோறும், கத்தரி, வெங்காயம், தக்காளி, முருங்கை ஆகிய காய்கறிகள் அடங்கிய தொகுப்பு மற்றும் அரிசியை வழங்கினார்.



மணலிபுதுநகரில், மாற்றுத்திறனாளிகள், கூலித்தொழிலாளர்கள், 100 பேருக்கு, தாம்பூல தட்டில், வெங்காயம், தக்காளி, கத்தரி, முருங்கை, வெண்டை, அரிசி உள்ளிட்டவற்றை வைத்து, சீர்வரிசை போல் வழங்கி, தி.மு.க., பிரமுகர், நாராயணனின் செயல், கவனத்தை ஈர்த்தது. கொரோனா பாதிப்பால் வீட்டில் முடங்கிய அரசியல்வாதிகள், மெல்ல வெளியே தலைக்காட்ட ஆரம்பித்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X