உலா வருபவர்களால் பீதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
23:11

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், தேவையின்றி வெளியே சுற்றுவதால், சுற்றுவட்டார மக்கள் பீதியடைந்து உள்ளனர்.



கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து, 1 கி.மீ., சுற்றளவு பகுதிகள், 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளை, சுகாதாரத் துறை மற்றும் போலீசார் இணைந்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அங்கு, வசிக்கும் மக்கள் வெளியே வரவும், வெளி நபர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.



அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், அவர்களின் வீடுகளிலே கிடைக்க, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆனால், தடையை மீறி, சென்னை புறநகரில், தாம்பரம், பல்லாவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், தேவையின்றி டூ - வீலர்களில் உலா வருகின்றனர்.



இவர்களை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், வைரஸ் பரவும் பீதியில் உள்ளனர்.'பார்சல்' சாப்பாடுகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலானோர், ராயபுரம் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இயங்கும், 'அம்மா' உணவகங்களில், அங்கேயே சாப்பிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், ஓட்டல்களில் உள்ளது போன்று, பொட்டலம் கட்டி, வினியோகம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



குறிப்பாக, பாரிமுனை, டேவிட்சன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில், தற்காலிகமாக இந்த நடைமுறை கொண்டுவர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், மக்கள் அதிகம்கூடுவது தவிர்த்து, தொற்று பரவுவதை தடுக்க முடியும் என, பகுதிமக்கள் தெரிவித்தனர்.



போலீசார் திணறல்





சென்னையில், 150 இடங்களில், போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு போக்குவரத்து ஆய்வாளரும், தினமும், 50க்கும் மேற்பட்ட வாகனங்களை, பறிமுதல் செய்து வருகின்றனர். 'ஊரடங்கு முடியும் வரை, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வழங்கக் கூடாது' என, காவல் துறை மேல் அதிகாரிகள், திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதனால், பறிமுதல் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால், அவற்றை பாதுகாக்க முடியாமல், போக்குவரத்து ஆய்வாளர்கள் திணறி வருகின்றனர்.


--- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X