எங்களையும் கவனிக்குமா அரசு? தூய்மை பணியாளர்கள் வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
23:14

'கொரோனா' வைரஸ் தொற்றை தடுக்க, சுகாதார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, தினக்கூலி துாய்மை பணியாளர்களுக்கு உதவ, தமிழக அரசு முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், மார்ச், 24 முதல், 21 நாட்களுக்கு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தினக்கூலிசுகாதார துறை சார்பில்,தமிழகம் முழுவதும், துாய்மை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதில், அரசு மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான துாய்மை பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.மாநிலம் முழுதும், பல தனியார் நிறுவனங்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், தூய்மை பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளன.



சில தன்னார்வ அமைப்புகளும், துப்புரவு பணியை, தினக்கூலி ஆட்களை வைத்து செய்து வருகின்றன.இவற்றின் கீழ், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர்.இவர்களில் பலர், 10 ஆண்டுகளுக்கும் மேல், ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, அரசு பணியாளர்களுக்கு நிகரான சம்பளமோ மற்ற சலுகைகளோ கிடைப்பதில்லை.



ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும், துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:அரசால் நிரந்தரம் செய்யப்பட்ட, துாய்மை பணியாளர்களுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கேற்ப, ஏழு முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.ரூ.1 லட்சம்இது தவிர, அவர்களுக்கு வாழ்நாள் மருத்துவ காப்பீடுகளும் உள்ளன. ஓய்வு பெற்றால், கணிசமான தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.



ஆனால், ஒப்பந்த அடிப்படையில், அனைத்து உள்ளாட்சிகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு,

5 - 15 ஆயிரம் ரூபாய்க்குள் தான் சம்பளம் கிடைக்கிறது.மேலும், வாழ்நாள் காப்பீடு மட்டும், பணிபுரியும் நிறுவனங்களால் போடப்பட்டு, பணியாளர்கள் விபத்து அல்லது இயற்கை மரணம் அடைந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.இதை தவிர, வேறு சலுகைகள் கிடைப்பதில்லை.



டெங்கு, சிக்குன் குனியா, புயல், வெள்ளம் என, அனைத்து பேரிடர்களையும் கடந்து, தற்போது, கொரோனாவிலும் பணிபுரிந்து வருகிறோம்.ஒவ்வொரு பேரிடர் காலங்களிலும், நாங்கள் பணிபுரியும் நிறுவன அதிகாரிகள், 'முதலில் பணியை முடியுங்கள்.பின், சிறப்பான சலுகைகள் வழங்குகிறோம்,' என கூறுகின்றனர்.பேரிடர் கால பிரச்னைகள் முடிந்த பின், எங்களை கண்டுகொள்ள மறுக்கின்றனர். அரசு தலையிட்டு, இம்முறை, குறைந்தபட்சம், இரண்டு மாத சம்பளத்தையாவது, ஊக்கத்தொகையாக வழங்க, எங்கள் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



எதிர்பார்ப்பு





அனைத்து சூழ்நிலைகளிலும், மக்கள் உயிரை பாதுகாப்பதில், போலீசாருக்கு உள்ளதைப்போல், பெரும் பங்கு, துாய்மை பணியாளர்களுக்கும் உள்ளது.அவர்களில், அரசு, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் என, பிரிவு பார்க்காமல், இருதரப்பினருக்கும் சமமான சலுகைகள் கிடைக்க, அரசு வழி செய்ய வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.




- நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10-ஏப்-202009:35:24 IST Report Abuse
sankaranarayanan தினக்கூலிசுகாதார துறை சார்பில்,தமிழகம் முழுவதும், துாய்மை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதில், அரசு மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான துாய்மை பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.மாநிலம் முழுதும், பல தனியார் நிறுவனங்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், தூய்மை பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளன என்ற செய்தி வரவேற்கப்பட வேண்டியதுதான் ஆனால் நடைப்போ வேறுவிதம். இங்கு கோடம்பாக்கம் மணடலத்தில் 137 - வார்டு கே கே நகர் 10 -வது செக்டர் 65 - வது தெருவை சுத்தம் செய்து ஒரு வாரமாகியும், வந்து பாருங்கள் தெரியும். இதற்க்கு மேல் இந்த செக்டரில்தான் வார்டு அலுவலகமும் உள்ளது. 65 - வது இரு புறமும், கணடவர்கள் வாரணம் நிறுத்தப்பட்டு, சாலையின் இருபுறமும் சுத்தப்படுத்தி பல நாட்கள் ஆகின்றன. பலமுறை இங்குள்ள சென்னை மாகாண அலுவலகத்திற்கு எடுத்துச்சொல்லியும் எந்த பயனும் இல்லை. இனிமேல் இங்கு யாருக்காவது வியாதி வந்தால் நீதி அலுவலகத்திர்ற்கு செல்ல வேண்டிய நிலைமை வரும். யாரும் கண்டு கொள்ள வில்லை. இந்த தெருவிற்கு என்று சுத்தம் செய்ய ஒதுக்கிய நபர் எங்குசென்றர் என்பது தெரியவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X