உணவிற்காக ஏங்கும் வட மாநில தொழிலாளர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
23:26

மாதவரம்:கட்டுமான பணிக்காக, சென்னைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள், உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.



மாதவரம் மண்டலம், 24, 32 வார்டுகளில், தனியார் கட்டுமான பணிகள் நடந்து வந்தன.அவற்றுக்காக, மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அய்யன் திருவள்ளுவர் சாலை, லட்சுமிபுரம், சூரப்பட்டு ஆகிய பகுதிகளில், குடும்பத்தினருடன் தங்கி உள்ளனர்.



ஊரடங்கு உத்தரவால், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியவில்லை. அவர்களை, தினக்கூலி அடிப்படையில், வேலைக்கு அழைத்து வந்தவர்கள், ஒரு குடும்பத்திற்கு, 2,000 ரூபாய் மட்டும், முன்பணமாக கொடுத்தனர்.அதில், ஒரு சில நாட்களுக்கான உணவுப்பொருள் மட்டுமே, அவர்களால் வாங்க முடிந்தது. அதன்பின் உணவு கிடைக்காமல் தவித்தனர்.அவர்களின் நிலை கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சில நேரம் உதவினர்.தற்போது உணவுப்பொருள் வாங்க பணமின்றியும், உணவு கிடைக்காமலும் தவிக்கின்றனர்.



இது குறித்து, அங்குள்ள சமூக ஆர்வலர்கள், மாதவரம் தாசில்தார் மற்றும் மண்டல அதிகாரிகளிடம், வட மாநில தொழிலாளர்களுக்கு உதவ வேண்டுமென, தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்களின் ஆதார் எண் நகல்களை, பெயர் மற்றும் மொபைல் போன் தொடர்பு எண்ணுடன் கொடுத்துள்ளனர். ஆனால், நேற்று வரை அவர்களுக்கு, எந்த உதவியும் கிடைக்கவில்லை.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POORMAN - ERODE,இந்தியா
10-ஏப்-202012:31:32 IST Report Abuse
POORMAN தமிழகத்தை சார்ந்த சிலர் கால் நடையாய் சொந்த ஊருக்கு வந்தனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X