தன்னலம் கருதாமல் உதவிய நல்லுள்ளங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
23:32

'கொலைக்கார' வைரசான கொரோனாவை தடுக்க, ஊரடங்கு தடை உள்ளதால், மக்கள் அத்தி யாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பல இடங்களில்,அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பலர் உள்ளனர். அவர்களை தாங்கும் வகையில், நல்லுள்ளத்தினர் பலர், தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.அவற்றில் சில:களத்தில் ஐ.டி.சி.,சென்னை:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதர வாக, பல்வேறு உதவிகளை, ஐ.டி.சி., நிறுவனம் செய்து வருகிறது. இது குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:இதுவரை, 10 லட்சம் சேவலான் சோப்புகள், 6 லட்சம் சன்பீஸ்ட் பிஸ்கட், 3 லட்சம் இப்பீ நுாடுல்ஸ் மற்றும் 1.5 லட்சம் 'பி' இயற்கை குளிர்பானம் ஆகியவை, 17 மாநிலங்களில் உள்ள, புலம்பெயர்ந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதுதவிர, சமைக்கப்பட்ட உணவுப் பொட்ட லங்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக, 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் நிவாரண நிதிக்காக, 100 கோடி ரூபாய் நிதியும் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கனரா வங்கி நிவாரணம்சென்னை: கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு, சமூக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இரவு, பகல் பாராமல், மாநகராட்சி ஊழியர்கள், துாய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக, கனரா வங்கி சங்கத்தின், தமிழ் மாநிலக் குழு சார்பில், மேற்கு மாம்பலம், தம்பையா தெருவில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில், அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன.இதில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர், வெங்கடாசலம், தமிழ் மாநில குழுவின் செயலர், வேணுகோபால், சங்க நிர்வாகிகள், ஸ்ரீகிருஷ்ணா, கார்த்திக், ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.4,000 பேருக்கு அரிசிநீலாங்கரை: இ.சி.ஆர்.,நீலாங்கரை, காரப்பாக்கம்பகுதியில், தினக்கூலி வேலை செய்வோர் அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் சிலர், அடுத்த வேளை உணவுக்காக, உதவியை எதிர்பார்த்து இருந்தனர்.இவர்களுக்கு உதவ, அ.தி.மு.க.,வின் சோழிங்கநல்லுார் கிழக்கு பகுதி செயலர் லியோ என்.சுந்தரம் முன் வந்துள்ளார். நீலாங்கரை, காரப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 4,000 பேருக்கு, தலா, 25 கிலோ அரிசி வழங்கினார்.13,000 முக கவசங்கள்சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, ஜீயர் அறக்கட்டளை சார்பில், தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக, 13 ஆயிரம் முக கவசங்கள், சென்னை மாநகராட்சியின் மண்டல துணை கமிஷனர் ஆல்பி ஜானிடம் நேற்று வழங்கப்பட்டது.அப்போது, அறக்கட்டளையின் தலைவர் ரவீந்திர குமார் ரெட்டி, அறங்காவலர் கிருஷ்ணா ராவ் உட்பட பலர், உடன் இருந்தனர்.\350 பேர் பயன்ஆவடி: ஆவடி, நரிக்குறவர் காலனி, பாண்டியன் நகர், சப்தகிரி நகர், நந்தவனமேட்டூர், திருமுல்லைவாயல் மூன்று நகர் உள்ளிட்ட பகுதிகளில், 350 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, அமைச்சர் பாண்டியராஜன், அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், நேற்று வழங்கினார்.போலீசார் உதவிகொடுங்கையூர்: ஊரடங்கால், நடைபாதை வியாபாரிகள், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சாலையோரத்தில் வசிப்போர் உணவின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.இம்மக்களுக்கு, சமூக ஆர்வலர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவி வருகின்றனர்.அந்த வகையில், பெரம்பூர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை, சென்னை கலாம் மாணவர்கள் ஆகியோர், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் குரூஸ்டன் இணைந்து, கொடுங்கையூர் பார்வதி நகரில், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு, நேற்று, அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.சிந்தாதிரிப்பேட்டை: மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள், நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்தனர்.அவர்களுக்கு சிந்தாதிரிப்பேட்டை ஆய்வாளர் முருகேசன், தலா, 5 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கினார். நிவாரணப் பொருட்களை வாங்கியவர்கள், 'காவல் துறை உங்களது நண்பன்' என்ற வாசகத்திற்கு ஏற்ப, ஆய்வாளர் செயல்பட்டு வருவதாக பாராட்டினர்.
உதவிக்கரம்சைதாப்பேட்டை: ஊரடங்கு உத்தரவால், நரிக்குறவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு உதவ, சைதாப்பேட்டை தொகுதி, எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் முன்வந்து உள்ளார்.சைதாப்பேட்டை தொகுதி, ஜிப்ஸி காலனியைச் சேர்ந்த, 165 நரிக்குறவர் குடும்பங்கள் மற்றும் பார்த்தசாரதி தோட்டத்தைச் சேர்ந்த, 185 ஏழை குடும்பங்களுக்கு, தலா, 5 கிலோ அரிசி, காய்கறி, முக கவசம், கிருமி நாசினி வழங்கினார்.ஊரடங்கு முடியும் வரை, தேவையான உதவிகள்செய்வதாக, அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.அன்னமிடும் ரயில்வேசென்னை: தெற்கு ரயில்வேயில், சென்னை, சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய நிலையங்களிலும், அருகில் உள்ள கிராம பகுதிகளில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு, ரயில்வேசார்பிலும், சேவை அமைப்புகளின் சார்பிலும், ஏழு நாட்களில், 50 ஆயிரம் பேருக்கும், திருச்சி, மதுரை ரயில்வே கோட்டத்தில், முக்கிய நிலையங்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கு, மூன்று நாட்களில், 20 ஆயிரம் பேருக்கும் என, 70 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு உள்ளது.ஒரு நாள் சம்பளம்சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நிரந்தர பணியாளர்களாக, நிலைய கட்டுப் பாட்டாளர்கள், தொழில் நுட்பம் மற்றும் போக்குவரத்து பிரிவு உட்பட, முக்கிய செயல் பிரிவுகளில், 515 பேர் உள்ளனர். இவர்களின், ஒரு நாள் சம்பளம், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசுக்கு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X