ஊராட்சிகளில் பிளீச்சிங் கிருமி நாசினி சப்ளை இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
23:56

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள, 55 ஊராட்சிகளுக்கு, ஒன்றிய நிர்வாகம், பிளீச்சிங், கிருமி நாசினி மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிய நிலையில், தற்போது அதை அந்தந்த ஊராட்சி களே வாங்கி கொள்ள அறிவுறுத்துகின்றன.



தற்போது கடைகள் இல்லாத சூழலில், குறைந்த அளவில் இவற்றை வெளிசந்தையில் வாங்க முடியாது. மேலும், வருவாய் இல்லாத ஊராட்சிகளில், இவற்றை வாங்குவதற்கே பணம் இல்லை.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கிய நேரத்தில் கிராமங்களில், பிளீச்சிங், கிருமி நாசினி உள்ளிட்டவை போடப்பட்டன.அதன்பின், அவை போடப்படாமல் உள்ளதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.



அத்திப்பட்டு, வல்லுார் உள்ளிட்ட ஒன்றிரண்டு மட்டும் வருவாய் உள்ளவைகளாக உள்ளன. இங்குள்ள தொழில் நிறுவனங்கள் உதவிஉடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பிளீச்சிங், கிருமி நாசினி மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்டவைகளை எளிதாக பெறுகின்றன.மற்ற ஊராட்சிகளில் பிளீச்சிங், கிருமி நாசினி தெளிப்பு பணிகள், ஒரு வாரமாக சரிவர போடப்படாமல் உள்ளன.



மீஞ்சூர் ஒன்றியத்தில், மூன்று பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பிளீச்சிங். கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை, ஒன்றிய நிர்வாகம் மொத்தமாக கொள்முதல் செய்து, தேவையுள்ள ஊராட்சிகளுக்கு, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X