இருளர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
இருளர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
00:02

திருத்தணி:காஞ்சிப்பாடி இருளர் காலனியில், 100 குடும்பத்தினருக்கு வருவாய் கோட்டாட்சியர் மளிகை பொருட்கள் வழங்கினார்.திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி ஊராட்சியில், 100 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், இருளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.



இதையடுத்து, நேற்று, இருளர் குடும்பத்தினருக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி வழங்கும் நிகழ்ச்சி, ஊராட்சி மன்ற தலைவர் உமா தலைமையில் நடந்தது.இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணம்அமுதா பங்கேற்று, 100 குடும்பங்களுக்கும், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி வழங்கினார்.வருவாய் ஆய்வாளர் சுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவகுமார், பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X