| '2 மணி நேரம் அனுமதி தாருங்கள்' Dinamalar
'2 மணி நேரம் அனுமதி தாருங்கள்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
00:03

திருவள்ளூர்:தினமும், இரண்டு மணி நேரம் கடை திறந்து வியாபாரம் நடத்த அனுமதிக்குமாறு, மளிகை வியாபாரிகள், காவல் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.



திருவள்ளூர் நகராட்சி, பத்தியால்பேட்டையில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 5 கி.மீட்டர் துாரம், கட்டுப்பாட்டு பகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, நகராட்சி பகுதிகளில், மருந்து கடை தவிர, காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு விட்டன.நகராட்சி மூலம், காய்கறிகள், வீதி வீதியாக சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மளிகை பொருட்கள், குறிப்பிட்ட கடைகள் மூலம், 'டோர் டெலிவரி' செய்யப்படுகிறது.



இந்த நிலையில், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த, மளிகை வியாபாரிகள், 20க்கும் மேற்பட்டோர், நேற்று, திருவள்ளூர் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தனர். கடைகள் மூடப்பட்டு உள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினமும், இரண்டு மணி நேரமாவது கடையை திறந்து விற்பனை செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறைஉடன் கலந்து பேசி, நடவடிக்கை எடுப்பதாக, டி.எஸ்.பி., கங்காதரன் உறுதியளித்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X