| நிவாரணம் வழங்கல; கிராமத்தினர் போராட்டம் Dinamalar
நிவாரணம் வழங்கல; கிராமத்தினர் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
01:27

நரிக்குடி:அரசு வழங்கிய நிவாரண தொகை நிறுத்திவைக்கப்பட்டதையடுத்து 10க்கு மேற்பட்ட கிராமத்தினர் ரேஷன் கார்டை ஒப்படைக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நரிக்குடி வி.கரிசல்குளம், பூம்பிடாகை, கருவக்குடி, எஸ். நாங்கூர், தச்சனேந்தல் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராம ரேஷன் கடைகளை ஆற்றல் மகளிர் அமைப்பினர் நிர்வகித்து பொருட்கள் வினியோகித்தனர். முறைகேடுகள் நடந்ததையடுத்து கூட்டுறவு சங்கம் மூலம் பொருட்கள் வழங்க கலெக்டரிடம் கிராமத்தினர் மனு கொடுத்தனர்.



இதையடுத்து கூட்டுறவு சங்கத்தின் மூலம் 5 மாதங்களாக பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. இதை எதிர்த்து மகளிர் அமைப்பினர் நீதிமன்த்தில் வழக்கு தொடர்ந்தனர். உத்தரவு வரும் வரை பொருட்கள் வழங்கக்கூடாது என நிறுத்தி வைக்கப்பட்டது. ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் ஊரடங்கு அரசு நிவாரணமான ரூ. ஆயிரம், ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை. ஆத்திரமடைந்த கிராமத்தினர் ரேஷன் கார்டை தாசில்தாரிடம் ஒப்படைக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X