| டில்லி சென்றவர்கள் குடும்பத்தினர் 54 பேருக்கு கொரோனா பரிசோதனை Dinamalar
டில்லி சென்றவர்கள் குடும்பத்தினர் 54 பேருக்கு கொரோனா பரிசோதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
01:28

விருதுநகர்:டில்லி தப்லிக் ஜமாத் மாநாடு சென்றவர்களின் குடும்பத்தினர் 54 பேர் கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் மருத்துவமனை அழைத்து வரப்பட்டனர்.



விருதுநகர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 10 பேர் டில்லி மாநாடுக்கு சென்று வந்தவர்கள்.இவர்கள் விருதுநகர் பர்மா காலனி வச்சக்காரப்பட்டி ஆவடையாபுரம் அருப்புக்கோட்டை வாழவந்தாபுரம் ஜின்னா தெரு ராஜபாளையம் சம்மந்தபுரம் ஸ்ரீவில்லிபுத்துார் வாழைக்குளம் ஒத்தை தெரு நந்தவன பட்டி தெரு மாதாங்கோயில் தெரு பகுதிகளில் உள்ளவர்கள்.



இவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் 90 பேருக்கு பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு 54 பேர் அழைத்துவரப்பட்டு அவர்களது சளி ரத்த மாதிரிகள் எடுத்து மதுரைக்கு அனுப்பப்பட்டது. கலெக்டர் கண்ணன் கூறியதாவது: நேற்று 54 பேருக்கு முடிந்த நிலையில் இன்று மீதமுள்ள 36 பேருக்கு சோதனை நடக்கிறது என்றார்.



அரசு வாகனத்தில் வர மறுப்பு






ராஜபாளையத்தில் இருந்து டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினர் 13 பேரை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்ல சுகாதார இணை இயக்குனர் ராம்கணேஷ் டாக்டர் கருணாகரப்பிரபு நகர்நல அலுவலர் சரோஜா தாசில்தார் ஆனந்தராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் வந்தனர்.இதற்காக அவர்களுடன் காலை முதல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு சம்மதிக்க அரசு வாகனங்களில் வர மறுத்தனர். இதன்பின் மூன்று தனி கார்களில் மூன்று குடும்பத்தினர் விருதுநகர் அழைத்துவரப்பட்டனர். இருவர் கொண்ட ஒரு குடும்பத்தினர் மட்டும் அரசு வாகனத்தில் வந்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X