ஊரடங்கால் திணறல் பரிதவிப்பில் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் :நிவாரண தொகை வழங்க எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
01:32

சிவகாசி:ஊரடங்கு உத்தரவால் மாவட்டத்தில் வேலையிழந்து தவிக்கும் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.



மாவட்டத்தில் சிவகாசி சாத்துார் வெம்பக்கோட்டை விருதுநகர் பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் 400 தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இதை நம்பி 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். ஊரடங்கால் இதன் ஆலைகள் மூடப்பட்டன. பெரும்பாலான ஆலைகளில் தினக் கூலிகளாக தான் வேலை பார்க்கின்றனர். வேலைக்கு சென்றால் மட்டுமே ஊதியம் கிடைக்கும். ஆலைகள் மூடலால் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி உள்ளனர்.



வார மாத சம்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அன்றாட தேவைகளான மளிகை சாமான்கள் உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தான் வாங்கும் நிலையில் இவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதற்கு பொருட்களின் விலையேற்றமும் ஒரு காரணமாக உள்ளது. மற்றவர்களிடம் கடன் வாங்க கூட முடியாத நிலை உள்ளது. தன்னார்வலர்கள் சிலர் உணவிற்கு தேவையான பொருட்கள் பணமும் வழங்கி வருகின்றனர். இன்னும் சிலர் உணவினை வழங்குகின்றனர்.



ஆனால் இவை அனைத்தும் தற்காலிகமாக மட்டுமே கிடைப்பதால் மற்ற தேவைகளுக்கு சிரமப் படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு பட்டாசுதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவி தொகை வழங்குவது அவசியமாகிறது.



சிரமத்தை போக்குங்க





விடுமுறை காலத்தில் தொழிலாளர்கள் ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டதால் முன்பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஊதியம் கொடுக்கவில்லை .அரசு உத்தரவுபடி தொழிலாளர்களுக்கு விடுமுறை கால ஊதியத்தை வழங்கி அவர்களின் சிரமத்தை போக்க வேண்டும். கலெக்டரிடம் இதுகுறித்து வலியுறுத்தி உள்ளோம்.



- முருகன் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்க பொருளாளர் சிவகாசி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X