மதுரையில் கொரோனா நிவாரணம் தாராளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
02:30

மதுரை கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கட்சிகள், பல்வேறு தரப்பினர், அமைப்பினர், தனி நபர் சார்பில் நிதி, உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பா.ஜ., மதுரை தல்லாகுளம் மண்டல் சார்பில் ஏழைகள், ஆதரவற்றோர், முதியோருக்கு உணவு, அரிசி, பருப்பு மற்றும் சமையல் பொருட்கள், முகக்கவசம் வழங்கும் பணி துவங்கியது. மண்டல் தலைவர் பாலமுருகன், நிர்வாகிகள் கார்த்திகேயன், நாச்சியப்பன், பாலசுப்பிரமணியன், சரவணகுமார் ஏற்பாட்டில் ஏப்.,14 வரை வழங்கப்படுகிறது. மனிதநேய மன்றம் பொது அறக்கட்டளை தலைவரும், அரசின் சிறுபான்மையினர் ஆணைய குழு முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ், மனைவி ேஹமி ஆகியோர் கொரோனா நிவாரண நிதியாக தங்கள் ஒருமாத ஓய்வூதியம் ரூ.1.26 லட்சத்தை கலெக்டர் வினய்யிடம் வழங்கினர். எஸ்.ஆலங்குளம் பா.ஜ., புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் வேதகிரி தலைமையில் 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் துணைத்தலைவர் சிரில் ராயப்பன், செயலாளர் அப்துல்ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர். உசிலம்பட்டி சமத்துவபுரம், எருமார்பட்டி பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும், நாமக்கல் பகுதியில் இருந்து கிணறு தோண்டும் பணிக்காக வந்துள்ள 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கும் மின்வாரியம் சார்பில் அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கினர். உசிலம்பட்டி கோட்ட செயற்பொறியாளர் அழகுமணிமாறன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.கல்லுபட்டி பேரூராட்சி சார்பில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சூசைஇன்பராஜேஷ், துப்புரவு மேற்பார்வையாளர் முத்தழகு, அலுவலர்கள் பாலகிருஷ்ணன், செந்தில் செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் கூடல்மலைத்தெரு சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் மாயாண்டி சாமி கோயிலில் தினமும் மதியம் அன்னதானம் பார்சலாக வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். உச்சபட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 451 குடும்பத்தினருக்கு அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. ஆர்.டி.ஓ., சவுந்தர்யா, தாசில்தார் தனலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் ஐயப்பன், ஒன்றிய தலைவர் லதா, ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழழகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், அமைச்சரின் நேர்முக உதவியாளர் கார்த்தி பங்கேற்றனர். திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்திநிலையம் ஸ்ரீவசந்தசாய் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் ஆசிரம தலைவி வசந்தசாய் ஏற்பாட்டில் ஆர்.டி.ஓ., சவுந்தர்யாவிடம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள், முககவசம் வழங்கப்பட்டது. தலைமை நிர்வாகி வெங்கட்ராமன், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், பூமிராஜன், வெங்கடேஷ் பங்கேற்றனர். திருமங்கலத்தில் மோடி கிச்சன் சார்பில் தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்திரன் தொடங்கி வைத்தார். தொகுதி பொறுப்பாளர் சரவணக்குமார், நகர் தலைவர் சின்னச்சாமி, ஒன்றிய தலைவர் சேதுபாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட கலாசார பிரிவு கோவிந்தராஜ், நிர்வாகிகள் தமிழ்மணி, குருசாமி கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X