இடைவெளி அவசியம்! கொரோனா பேராபத்தை உணருங்கள்:மாவட்ட நிர்வாகம் மீண்டும் வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

10 ஏப்
2020
02:50
பதிவு செய்த நாள்
ஏப் 10,2020 02:48

திருப்பூர்:கொரோனாவின் பேராபத்தை உணர்ந்து, தேவையின்றி வெளியே வராமல், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், நேற்று மாலை நிலவரப்படி, 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லி சென்று வந்தவர்களின் குடும்பத்தினர், மீண்டும் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டை சுற்றிலும், கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில், பெரிய தோட்டம், பூளவாரி சுகுமார் நகர், காலேஜ்ரோடு, அங்கேரிபாளையம், மங்கலம், பெரியகடை வீதி பகுதிகளை சேர்ந்த, ஒன்பது பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, திருப்பூர் - 12, தாராபுரம் - 6; அவிநாசி- 5; உடுமலை -3 என, 22 பேர் பாதிக்கப்பட்டனர்.திருப்பூரை சேர்ந்த ஒருவர் மட்டும் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், அவர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார். கொரோனா பாதிப்புள்ள நபர்களின் வசிப்பிடத்தை சுற்றிலும், 3 கி.மீ., மற்றும் ஒரு கி.மீ., சுற்றளவுக்கு, கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், கொரோனா அவசர நிலையை உணராத மக்கள், சமூக இடைவெளியை பின்பற்றால், கடைகளில் கும்பலாக சேர்ந்து நிற்கின்றனர். தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில், தேவையில்லாத நடமாட்டமும் கட்டுக்குள் வராமல் இருக்கிறது.பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் சேவை குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, களமிறங்கியுள்ளனர்.


இரவு, பகல் பாராது போலீசார், தன் உயிரை பணையம் வைத்து, மக்களை கண்காணித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், போலீஸ், மருத்துவத்துறையினர், கொரோனா தடுப்பு குழு ஆகியோரின் சீரிய பணியை உணர்ந்தும், கொரோனாவின் பேராபத்தை அறிந்தும், மக்கள் அமைதி காக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.


தேவையில்லாமல் பயணித்தால், போலீசாரின் நடவடிக்கை பாயும். மக்கள் அடர்த்தி நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொருவரும் கட்டுப்பாடுடன் இருந்து, கொரோனா என்ற அரக்கனை அடியோடு ஒழித்துக்கட்ட ஒத்துப்புநல்க வேண்டும் என்பது, அனைவரது எதிர்பார்ப்பு.


அலட்சியம் காட்டும் மக்கள்


திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட்டில், உழவர் சந்தை தற்காலிகமாக செயல்படுகிறது. விவசாயிகளும், வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளி பின்பற்றி வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று காலை நடந்த வியாபாரத்தின் போது, வாடிக்கையாளர்கள் நெருக்கியடித்தபடி காய்கறிகள் வாங்கி சென்றனர். பலரும், முக கவசம் அணியவில்லை. இதைக் கண்காணிக்க வேண்டிய அலுவலர்களும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இப்படி பொதுமக்கள் நடந்து கொண்டால், கொரோனா பரவலை எவ்வாறு தடுப்பது என்று, சுகாதார துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஏப்-202015:51:52 IST Report Abuse
Vadivelu Shanmugam . சொந்த காரில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து சொந்த ஊர் செல்ல விரும்புவோரை உறுதிமொழி வாங்கிக்கொண்டு அனுமதிக்கலாமே. தாங்கள் இதை அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுகிறேன். நானும் என் மனைவியும் ஓசூரில் உறவினர் வீட்டில் மாட்டிக் கொண்டோம். மூன்று நிபந்தனைகளையே பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. சமூக விலகலை கடைப்பிடிப்பபோருக்கு சொந்த ஊருக்கு சொந்த காரில் பயணிக்க அரசு அனுமதிக்கும்படி தாங்கள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
10-ஏப்-202014:49:33 IST Report Abuse
Vadivelu Shanmugam இப்படி கூட்டமாக நிற்பதற்கு அனுமமதி உண்டு. ஆனால் சொந்த காரில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து சொந்த ஊர் செல்ல விரும்புவோரை உறுதிமொழி வாங்கிக்கொண்டு அனுமதிக்க அரசு தயாராக இல்லை. அரசு குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி செயல்படக்கூடாது. சூழ்நிலைக்குத் தக்கவாறு முடிவெடுகக்கத் அரசுக்குத் தெரியவில்லை. குடிமக்கள் புலம்பலையும் கருத்திற்கொண்டு நிபந்தனகளுக்கு திருத்தம் வழங்க வேண்டும்.
Rate this:
Cancel
10-ஏப்-202008:49:04 IST Report Abuse
ஆப்பு கொரொனா ஆபத்திற்கும் பசிக்கும் இடையே நடக்கும் போட்டி. வேண்டுகோள் விடுப்பது எளிது. அதையும் மீறி வருகிறார்கள் என்றால் அறியாமையால் அல்ல. உணருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X