தேர்தல் பணம் கிடைக்காமல் அவதி: ஊரடங்கால், இப்படியும் பிரச்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
03:26

திருப்பூர்:உள்ளாட்சி தேர்தல் பணம் கிடைக்காததால், ஊரடங்கு நேரத்தில், உள்ளாட்சித்துறை அடிப்படை பணியாளர்கள், கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில் உள்ள, 27 மாவட்டங்களில் மட்டும், ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த டிச., மாதம் நடந்தது. தேர்தல் முடிந்து, பல வாரங்களுக்கு பின், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கான சம்பளத்தொகை விடுவிக்கப்பட்டது.கலெக்டர், இணை கலெக்டர் மற்றும் துணை கலெக்டர் நிலை அதிகாரிகள், பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ., உதவியாளர், அடிப்படை பணியாளர் என, பணிக்கு தகுந்த வகையில், உள்ளாட்சி தேர்தல் சம்பளம் விடுவிக்கப்பட்டது.ஒன்றிய நிர்வாகம் வழங்கிய பட்டியல் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கியது. அந்தந்த ஒன்றியங்களுக்கு நிதி சென்றடைந்ததும், மேல்நிலை அதிகாரிகள் உடனுக்குடன் தேர்தல் சம்பளத்தை எடுத்துக்கொண்டனர். இதுநாள் வரை அடிப்படை பணியாளருக்கு சம்பளம் விடுவிக்கப்படவில்லை.கொரோனா ஊரடங்கால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், தேர்தல் சம்பளம் நிலுவையில் இருப்பதால், அடிப்படை பணியாளர் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அடிப்படை பணியாளர்கள் கூறுகையில், 'அலுவலக உதவி யாளர், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் என, அடிப்படை பணியாளருக்கு, தலா, 7,000 ரூபாய் வீதம் தேர்தல் சம்பளம் ஒதுக்கப்பட்டது.ஆனால், திருப்பூர் உள்ளிட்ட ஒன்றியங்களில், பணியாளருக்கு வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, தேர்தல் சம்பளத்தை வழங்க உத்தரவிட வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X