இருப்பிடத்துக்கு செல்லும் காய்கறிகள்: கிராம மக்களிடையே அமோக வரவேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
04:35

ஊட்டி:தோட்டக்கலை துறை சார்பில், இருப்பிடத்திற்கு சென்று மலை காய்கறிகள் விற்கும் திட்டத்துக்கு, கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. உழவர் சந்தையில் நாளுக்கு, நாள் அதிகரித்து வந்த கூட்ட நெரிசலால், அங்கு போதிய வசதிகள் இல்லை. இதனால், காய்கறிகளை வாங்க வரும் மக்கள் 'சமூக இடைவெளி' விட்டு வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, உழவர் சந்தை, மார்க்கெட் வியாபாரிகள் பாதிக்காத வகையில், ஊட்டி காந்தி மைதானத்தில், பஸ் ஸ்டாண்ட்டில் திறந்த வெளி மார்க்கெட் அமைத்து கொடுக்கப்பட்டது.தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையா உத்தரவின்பேரில், விவசாயிகளிடமிருந்து மலை காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு, தோட்டக்கலை துறை மூலம், ஊட்டி நகர் மற்றும் கிராமங்கள்தோறும் வீடு, வீடாக சென்று மலை காய்கறிகள் விற்கப்பட்டு வருகிறது.தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,''கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மக்களுக்கு இருப்பிடத்திற்கு சென்று மலை காய்கறிகளை விற்கும் நோக்கில் இயக்குனர் உத்தரவு படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மலை காய்கறிகள் அடங்கிய பை, 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 டன் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது,''என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X