ஊரடங்கை மீறிய 555 வாகனங்கள் பறிமுதல்: இடைவெளி பராமரிக்காத 85 கடைகள் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
04:46

உடுமலை,:உடுமலையில், ஊரடங்கு உத்தரவை மீறி, அத்தியாவசிய பணி இல்லாமல் ரோட்டிற்கு வந்த, 555 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சமூக இடைவெளி பராமரிக்காத, 85 கடை உரிமயைாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'கொரோனா' பரவலை தடுக்கும் வகையில், ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல் ஒரு சில நாட்கள் ரோடுகளில் மக்கள் நடமாட்டம் இருந்த நிலையில், தற்போது பெரும்பாலான பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் வீடுகளில் இருக்கின்றனர். இருப்பினும், ஒரு சிலர் எந்த காரணமும் இல்லாமல், ரோடுகளில் சுற்றி வருகின்றனர்.அத்தியாவசிய பொருட்கள் வாங்க, காலை, 6:00 மணி முதல் 1:00 மணி வரை மட்டுமே வெளியில் வர வேண்டும், என அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்துக்கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மளிகை, காய்கறிகள் வினியோகமும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. காலை முதல் அனைத்து ரோடுகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு, அத்தியாவசிய பணி இல்லாமல், வெளியில் சுற்றி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மதியத்திற்கு மேல், போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, மருத்துவம் உள்ளிட்ட பணியை தவிர வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவு முதல், நேற்று முன்தினம், 555 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதே போல், காய்கறி மற்றும் மளிகை கடைகளில், சமூக இடைவெளியை பராமரிக்காமல், விதி மீறி செயல்பட்ட, 85 கடை உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீசார் கூறுகையில், 'ஊரடங்கு உத்தரவை மீறி வரும் அனைத்து வாகனங்களும் விசாரணை செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X