விவசாயிகள் கண்ணீர்! ஊரடங்கால் சந்தைகள் கூடுவதில்லை :வாழைத்தார் விற்பனையின்றி முடக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

10 ஏப்
2020
06:44
பதிவு செய்த நாள்
ஏப் 10,2020 04:54

ஆனைமலை;ஆனைமலை தாலுகா பகுதிகளில், வாழைத்தார் சந்தை, வாரச்சந்தை நடக்காமல் உள்ளதால், வாழைத்தார் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது.


ஆனைமலை ஒன்றியத்தில், 58 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கூடுதல் வருமானத்துக்காக பெரும்பாலான விவசாயிகள் தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் ஆண்டுதோறும், 450 ஏக்கரில் வாழை சாகுபடி செய்கின்றனர்.அறுவடை காலம், 10 முதல் 14 மாதமுள்ள பூவன், நேந்திரன், கதளி, செவ்வாழை, திசு வாழை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தாரை, ஆனைமலை, மீனாட்சிபுரம், கோட்டூர், சோமந்துரைசித்துார், நா.மூ.சுங்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடக்கும், வாழைத்தார் சந்தை, வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சந்தைகள் நடைபெறுவது இல்லை, கடைகளும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்படுகிறது. இதனால், வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.


விவசாயிகள், வாழைத்தார்களை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். பல விவசாயிகள், வாழைத்தார்களை வெட்டி, கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது:வாழை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு, 1.5 முதல் இரண்டு லட்சம் ரூபாய் செலவாகிறது.


ஏற்கனவே வாழை விவசாயத்தில் வருமானமில்லை, சந்தையில் இடைத்தரகர்களின் 'சிண்டிகேட்டால்' வாழைதாருக்கு ஏற்ற விலை கிடைக்காத நிலை உள்ளது.தற்போது, ஊரடங்கு உத்தரவால் சந்தைகள் நடப்பது முடங்கி, பொருளாதார ரீதியில் படுமோசமாக பாதித்து உள்ளோம்.சந்தைகள் நடத்த அனுமதி மறுப்பு, பல இடங்களில் வாழைத்தார் கொண்டு சென்றால் போலீசார் அனுமதிச்சீட்டு கேட்பதால், வியாபாரிகள் வாழைத்தார் வாங்குவதற்கு வருவதில்லை.


ஒரு ஏக்கருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாழை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு, அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும்.மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறையினர், விவசாயிகள் நலன் கருதி வாழைத்தார் சந்தை, வாரச்சந்தை நடத்த முன்வர வேண்டும். சமூக விலகலை பின்பற்றும் வகையில் கோடுகள் வரைந்து, பாதுகாப்பான முறையில் சந்தை நடத்த வேண்டும். வாழைத்தார் கொண்டு செல்ல அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஏப்-202020:51:22 IST Report Abuse
Ram pollachi சுப நிகழ்ச்சிகள் மற்றும் முகூர்த்தம் சமயத்தில் ஒரு ஜோடி வாழை மரத்தை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்ற போது கண்ணுக்கு தெரியவில்லை?
Rate this:
Cancel
10-ஏப்-202007:27:09 IST Report Abuse
ஆப்பு இதோ 10000 ரூவா நிவாரணம் வந்துக்கிட்டே இருக்கு.
Rate this:
Cancel
10-ஏப்-202007:26:58 IST Report Abuse
ஆப்பு இதோ 10000 ரூவா நிவாரணம் வந்துக்கிட்டே இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X