அ.தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம், உணவு பொருட்கள் வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
11:42

ஓசூர்: ஓசூரில், அ.தி.மு.க., சார்பில், பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டன.


கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் தங்களை தற்காத்து கொள்ள, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முக கவசம், கையுறைகளை இலவசமாக வழங்கினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கூறும் அறிவுரைகளை கேட்டு, மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க.,வினர் பலர் கலந்து கொண்டனர். ஊரடங்கால் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ள, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், ஓசூர் மாநகர, அ.தி.மு.க., சார்பில், உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், ஐந்து கிலோ அரிசி, காய்கறி தொகுப்பு மற்றும் முக கவசம் அடங்கிய, 3,000 பைகள் தயார் செய்யப்பட்டு, நகர செயலாளர் பால் நாராயணன் தலைமையில் வழங்கப்பட்டன. ராம் நகர், ஜிபி, வெங்கடேஷ் நகர் உட்பட பல்வேறு பகுதி மக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டன. சூளகிரி அடுத்த கெம்மேப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி பஞ்.,ல், ரேஷன் கார்டு இல்லாத, 50 குடும்பங்களுக்கு, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பி.டி.ஓ.,க்கள் விமல்ரவிக்குமார், பாலாஜி ஆகியோர், அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X