சேலத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடை; ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியவர்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
11:57

சேலம்: சேலத்தில், பல மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் பொதுமக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர். அனைவரும், முழு நாளையும் வீட்டுக்குள் கழிக்க வேண்டுமே என்ற அவஸ்தையுடன் பொழுதை போக்கி வருகின்றனர். சேலத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில், அறிவிக்கப்படாத மின் வெட்டு பல மணி நேரம் வரை நீடிக்கிறது. பல பகுதியில் இரண்டு மணி நேரம் வரை, தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் மின் தடை உள்ளதால், வயதானவர்கள், குழந்தைகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். தொழிற் சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படாத நிலையில், மின்சார தேவை வெகுவாக குறைந்துள்ளது. இதற்காக மின்சார உற்பத்தியை குறைக்கும் நிலை உள்ளது. மின்துறை அமைச்சர் தங்கமணி, 'தமிழகத்தில் மின் தடை ஏற்படாது' என, கூறி வருகிறார். தற்போது, தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லாத நேரத்தில், சேலத்தில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு, பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்கியுள்ளது. ஊரடங்கு காரணமாக, வெளியில் நடைபயிற்சிக்கு கூட செல்ல முடியாமல், வீட்டினுள் மக்கள் முடங்கி கிடக்கின்றனர். வயதானவர்களின் நிலைமையோ படுமோசம். இதில், மின்சாரம் இல்லாத போது, பொழுது போக்கு அம்சங்கள் மட்டுமின்றி, காற்றோட்டத்துக்கு மின் விசிறியை இயக்கமுடியாத நிலை ஏற்படுகிறது. ஊரடங்கு முடியும் வரையாவது தடையில்லா மின்சாரம் வழங்க, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X