கட்டுமான தொழிலாளர்களுக்கு உணவு தொகுப்பு வழங்க ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
12:21

கரூர்: 'கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுனர்களுக்கு சிறப்பு நிவாரண உணவு தொகுப்பு, ரேஷன் கடைகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு நிவாரண உணவு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, அரிசி, 15 கிலோ, பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ ஆகியவை ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகளில் டோக்கன் முறையில் சிறப்பு நிவாரண உணவு தொகுப்பு அளிக்கப்படும். எனவே, நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் நலவாரிய அட்டை அல்லது நலவாரிய ஓய்வூதிய ஆணை, ரேஷன் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றினை நேரில் காண்பித்து பெற்றுக்கொள்ளவும். நலவாரியத்தில் பதிவு செய்து இதுநாள்வரை ஆதார் அட்டை எண், ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை இணைக்க தவறிய தொழிலாளர்கள் கரூர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை, 04324 - 220330 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும். மேலும், 8508178917, 9442519701 ஆகிய வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அல்லது, lossskrr@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ, ரேஷன் கார்டு எண், ஸ்மார்ட் கார்டு எண், வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்களை அனுப்பவேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X