ராசிபுரம் உழவர் சந்தையில் கிருமி நாசினி சுரங்கம் திறப்பு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
ராசிபுரம் உழவர் சந்தையில் கிருமி நாசினி சுரங்கம் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
12:33

ராசிபுரம்: ராசிபுரம், உழவர் சந்தையில் கிருமி நாசினி சுரங்கம் தொடங்கப்பட்டது. ராசிபுரம், ரோட்டரி சங்கம் சார்பில், சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக, புது பஸ் ஸ்டாண்ட் முன்பாக, உழவர் சந்தைக்கு வந்து செல்பவர்களின் பாதுகாப்பிற்காகவும், அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள தற்காலிக தினசரி மார்க்கெட் வந்து செல்பவர்களின் வசதிக்காகவும், இரு இடங்களில் கிருமிநாசினி தெளிப்பான் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் திருமூர்த்தி தலைமை வகித்தார். அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு இதன் பயன்பாட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் சுந்தரம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்ரமணியம், டி.எஸ்.பி., விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X