| அனுமதி சீட்டு வினியோகம்: மல்லசமுத்திரத்தில் மும்முரம் Dinamalar
அனுமதி சீட்டு வினியோகம்: மல்லசமுத்திரத்தில் மும்முரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
12:33

மல்லசமுத்திரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ்தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. எனினும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. வாரத்தில் இரண்டுநாட்கள் மட்டும், மக்கள் வெளியில் வந்துசெல்லும் வகையில், அனுமதிசீட்டு மாவட்டம் முழுவதும் நேற்று வழங்கப்பட்டது. மல்ல சமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி அக்ரஹாரம் பஞ்சாயத்தில், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா, பஞ்., செயலாளர் தங்கமணி ஆகியோர், ஒவ்வொரு குடியிருப்பிற்கும் நேரடியாக சென்று, அனுமதி சீட்டை வழங்கி, கொரோனா வைரஸ் தற்காப்பு மற்றும் கைகழுவும் முறைகள் குறித்த, துண்டுபிரசுரத்தை வழங்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X