| 11,157 பேர் ஊரடங்கை மீறியதாக கைதானோர்...2 மாதங்களில் போலீசார் அதிரடி Dinamalar
11,157 பேர் ஊரடங்கை மீறியதாக கைதானோர்...2 மாதங்களில் போலீசார் அதிரடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2020
22:48

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 2 மாதங்களில் 8,926 வழக்குகளை போலீசார் பதிவு செய்து, 11,157 பேரை அதிரடியாக கைது செய்தனர்; மேலும் 5,083 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட ஏழு காவல் நிலைய உட்கோட்டங்கள் உள்ளன. இதில், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 6, சட்டம் ஒழுங்கு 46, கலால் 4, போக்குவரத்து காவல் நிலையங்கள் 5, என, மொத்தம் 61 காவல் நிலையங்கள் உள்ளன.இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், ரயில், ஆட்டோ, பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.அத்தியாவசிய தேவையான மருந்து, பால், காய்கறி, மளிகை கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர, தேவையின்றி வெளியே வரக்கூடாது; வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.



ஊரடங்கு அறிவித்து நேற்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதற்கிடையே சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கடலுார் மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் 24 ம் தேதி முதல் நேற்று வரை (மே 24ம் தேதி) ஊரடங்கு உத்தவை மீறி, தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்ததாக 8,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 11,157 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.



மேலும், இருசக்கர வாகனங்கள் 4,979, ஆட்டோக்கள் 33, நான்கு சக்கர வாகனங்கள் 71 என 5,083 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் இதுவரை 90 சதவீத வாகனங்கள் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X