மாரியம்மன் தெப்பக்குளத்தை மீண்டும் நிரப்ப நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 மே
2020
10:11
பதிவு செய்த நாள்
மே 25,2020 01:14

மதுரை, மதுரையின் குடிநீர் தேவைக்காக இன்று (மே 25) வைகை அணை திறக்கப்படுகிறது. இத்துடன் வறண்ட மாரியம்மன் தெப்பத்தை மீண்டும் நிரப்பி நிலத்தடி நீரைபெருக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


வைகை ஆற்றுப்படுகை வற்றியதால் உறை கிணறுகளில் நீரின்றிமாநகராட்சிக்கு 30 எம்.எல்.டி., குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்தானதால் வைகை அணைதிறக்கப்படவில்லை. நீர் திறந்திருந்தால்மீண்டும் உறை கிணறுகளில் நீர் ஊறிமாநகராட்சிக்கு கூடுதல் குடிநீர் கிடைத்திருக்கும். மதுரை மாநகராட்சி உள்ளிட்ட மற்ற உள்ளாட்சிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வைகை அணையை திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
திறக்கப்படும் நீரை வைகையில்அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் நிறுத்திநிலத்தடி நீரை பெருக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஐம்பதாண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் உதவியுடன் வைகை நீரால் நிரப்பப்பட்ட மாரியம்மன் தெப்பம் கோடையால் வற்றியுள்ளது. தடுப்பணையில் இருந்து குறிப்பிட்ட அளவு நீரைதெப்பத்திற்கு திருப்பி விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3.5 கி.மீ., நீளமுள்ள பனையூர் கால்வாயை மாநகராட்சி துார்வாரியுள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-மே-202004:01:56 IST Report Abuse
J.V. Iyer என்ன செய்யவேண்டும் என்று தெரிந்தும் இவற்றை செய்யாமல் இருக்கும் அரசு ஊழியர்கள் இருந்தால் என்ன?
Rate this:
Cancel
Marcopolo - Chennai,இந்தியா
25-மே-202006:55:14 IST Report Abuse
Marcopolo மிக நல்ல விஷயம். ஆனால் மக்கள் இங்கு அசுத்தம் செய்யாமல் இருந்தால் வரும் நாட்களில் இந்த குளம் நீர் வற்றாமல் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X