| கடலுார் மாவட்டத்தில் சலுான் கடைகள் திறப்பு Dinamalar
கடலுார் மாவட்டத்தில் சலுான் கடைகள் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2020
03:42

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், சலுான் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மே 19 முதல் சலுான்கள் இயங்க முதல்வர் அனுமதி அளித்தார். அதேபோல் நகரங்களிலும் திறக்க அனுமதிக்க வேண்டும் என முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து, சென்னையை தவிர இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சலுான்கள் மற்றும் அழகு நிலையங்களை நேற்று முதல் திறக்க முதல்வர் அனுமதி அளித்தார். தினமும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்க வேண்டும். முக கவசங்கள் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும். கடை உரிமையாளர் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சோப்பால் கை கழுவ வேண்டும். ஏசி பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் சலுான்கள் திறக்கப்பட்டன. இரண்டு மாதங்களாக முடிவெட்ட முடியாமல் தவித்து வந்த ஆண்கள் முடி வெட்டிக்கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X