| குண்டும் குழியுமான கிராமத்து சாலை: விவசாயிகள், பொதுமக்கள் அவதி Dinamalar
குண்டும் குழியுமான கிராமத்து சாலை: விவசாயிகள், பொதுமக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2020
14:58

நாமகிரிப்பேட்டை: ஜல்லி கற்களாக மாறியுள்ள சிங்கிலியம்கோம்பை சாலையை, சீரமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நாமகிரிப்பேட்டை ஒன்றியம், அடுத்தசிங்கிலியம் கோம்பையில் இருந்து, மெட்டாலா செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. ஏதோ ஒரு இடத்தில் குழியாக இருந்த சாலை, தற்போது முழுவதும் பெயர்ந்து ஜல்லி கற்களாக மாறிவிட்டன. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை விவசாயிகள் விளை பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்துகின்றனர். சாலை மோசமாக இருப்பதால் தாமதமாக மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன், ஆம்புலன்ஸ் வர மிகவும் சிரமப்பட்டது. நோயாளிகளை அழைத்து செல்வதற்கும் மிகவும் காலதாமதமாகிறது. இதுகுறித்து, இப்பகுதிமக்கள் கூறியதாவது: இந்த சாலை அமைத்து, பல ஆண்டுகள் இருக்கும். அதன் பிறகு சாலையை சரியாக பராமரிப்பு செய்யாததால், குண்டும் குழியுமாக மாறிவிட்டது. விவசாயிகள், மாணவர்கள் பயன்படுத்த சிரமப்படுகின்றனர். சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X