பங்கஜா மில் ரோட்டில் தலைக்கு மேலே ஆபத்து!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2020
01:10

உடைந்து விழும் மரங்களால் பொதுமக்கள் அச்சம்

சாக்கடை கால்வாயை துார்வாரணும்தடாகம் ரோடு, இடையர்பாளையம், காந்தி நகர், கண்ணதாசன் வீதி மற்றும் பரணி வீதிகளில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக, கழிவுநீர் தேங்கியுள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.-கிருஷ்ணராஜ், கண்ணதாசன் வீதி.

ரோட்டில் பள்ளம்போத்தனுார் - செட்டிபாளையம் ரோட்டில், ஆங்காங்கே, சாலை சிதிலமடைந்து பள்ளமாக உள்ளன. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- சிவா, மேட்டூர்.

குடிநீர் வினியோகம் சீராக இல்லைமேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில்ஸ், விஷ்ணு நகர், திருவள்ளுவர் வீதியில், குடிநீர் வினியோகம் சீராக இல்லை. குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.- சதீஸ், திருவள்ளுவர் வீதி.

பாதாள சாக்கடை அடைப்புதடாகம் ரோடு, வெங்கிட்டாபுரம், சுப்ரமணியபுரம் முதல் வீதியில், பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.- சற்குணன், வெங்கிட்டாபுரம்.

நிரம்பி வழியும் தொட்டிகள்பாப்பநாயக்கன்பாளையம், பரமேஸ்வரன் லே-அவுட்டில், வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.- பாக்யலட்சுமி, பரமேஸ்வரன் லே-அவுட்.

விளக்குகள் எரிவதில்லைமலுமிச்சம்பட்டி - செட்டிபாளையம் ரோட்டில் உள்ள, மின் கம்பங்களில் பெரும்பாலானவை எரிவதில்லை; மக்கள் அச்சப்படுகின்றனர். செந்தில்குமார், செட்டிபாளையம்.

ஆபத்தானமரக்கிளைகள்ராமநாதபுரம், பங்கஜா மில் ரோட்டில், சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள், உடைந்து விழும் நிலையில் உள்ளன. சாலையில் செல்வோர் மீது இவை விழுகின்றன. உடைந்த கிளைகளை அகற்ற வேண்டும்.- முத்துகுமார், ராமநாதபுரம்.

ரோடு மோசம்வாகன ஓட்டிகள் அவதிவெள்ளலுார் இடையர்பாளையம் - பட்டணம் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது இச்சாலையை செப்பனிட வேண்டும்.- ராஜ்குமார்,பட்டணம்.

பராமரிப்பில்லாத நீர் தேக்க தொட்டிதிருமலையாம்பாளையம், எம்.ஆர்.சி., காலனியில் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டி, பராமரிப்பின்றி துாண்கள் சிதிமடைந்துள்ளன. துாண்கள் விழுந்து விபத்து ஏற்படும் முன், சீரமைப்பது அவசியம்.- அங்கமுத்து, திருமலையாம்பாளையம்.

விஷப்பூச்சிகளின் தொந்தரவுமாநகராட்சி, 7வது வார்டுக்கு உட்பட்ட, தடாகம் ரோடு, இடையர்பாளையம், அன்புநகர், நான்காவது வீதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலியிடம், முட்புதராக மாறி விட்டது. இதில் இருந்து வெளியேறும் விஷப்பூச்சிகள், வீடுகளுக்குள் நுழைகின்றன; இதனால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.-மேனன், அன்புநகர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X