வேலையின்றி தவிப்பவர்கள்... கிளம்புங்க அன்னூருக்கு!ஆயிரக்கணக்கில் வேலை காலி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2020
01:24

அன்னூர்:வேலையில்லாமல் தவிக்கும் கோவை மக்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி! வடமாநில தொழிலாளர்கள் பலர், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதையடுத்து, அன்னூர் தாலுகாவில், நூற்பாலை, பவுண்டரி மற்றும் தொழிற்சாலைகளில், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 'வேலைக்கு ஆட்கள் தேவை' என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அன்னூர் தாலுகாவில், 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஸ்பிண்டில் திறன் வரையுள்ள, 110 நூற்பாலைகள் உள்ளன. இவை நூல் உற்பத்தி செய்து, சோமனூர், திருப்பூர், ஈரோடு மற்றும் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு அனுப்புகின்றன. ஏற்றுமதியும் செய்கின்றன.இந்த நூற்பாலைகளில் பணிபுரிந்தவர்களில், பல ஆயிரம் பேர் கடந்த, இரு வாரங்களில், ஒடிசா, பீகார் உள்ளிட்ட, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு, புறப்பட்டுச் சென்று விட்டனர். இதையடுத்து நூற்பாலைகளில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.ஷிப்டுக்கு 350 ரூபாய்!நூற்பாலை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'வேலை தெரியாதவர்களுக்கு, ஒரு ஷிப்டுக்கு, 300 ரூபாயும், தெரிந்தவர்களுக்கு, 350 ரூபாய் வரையும் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நூற்பாலைகளுக்கு வரலாம்.


தங்கும் வசதி தேவைப்படுபவர்களுக்கு, மில் வளாக விடுதியில், இலவச தங்கும் இடம் செய்து தரப்படும்' என்றனர்.அன்னூர் தாலுகாவில் எவ்வளவு பேர் வந்தாலும், வேலை தரக்கூடிய அளவுக்கு, நூற்பாலைகள் தற்போது செயல்பட துவங்கியுள்ளன.ஸ்டீல் பவுண்டரிகளுக்கும் தேவை!இதேபோல், அன்னூர் பகுதியில், குப்பேபாளையம், மசக்கவுண்டம்பாளையம், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஸ்டீல் பவுண்டரிகள் உள்ளன.இதில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களில், கணிசமானவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்று விட்டனர்.


இதனால் இங்கு பணிபுரியவும் ஆட்கள் தேவை, என, பவுண்டரி உரிமையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கு, ஷிப்டுக்கு, 400 முதல் 600 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் அன்னூர் தாலுகாவுக்கு, வேலை தேடி வருவோர் எவ்வளவு பேர் இருந்தாலும், வேலை தரக்கூடிய அளவுக்கு, தொழிற்சாலைகள் தயாராக உள்ளன.ஆகவே... கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவிப்பவர்கள், இனி கவலைப்படத் தேவையில்லை. கிளம்புங்க அன்னுாருக்கு!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X