| மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் Dinamalar
மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2020
23:33

சென்னை : மாவட்ட நல அலுவலகத்தில், போனில் தொடர்பு கொண்டு உதவிக் கேட்ட, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன



.வடசென்னை பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், கலெக்டரி டம் உதவி கோரிஇருந்தனர். இதையடுத்து, மாவட்ட நல அலுவலரின் முயற்சியில், கடந்த வாரத்தில், திருவொற்றியூர் தாலுகாவில் வசிக்கும், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.அதேபோல், தண்டையார்பேட்டை தாலுகாவில் வசிக்கும், 50 மாற்றுத்திறனாளிகளுக்கும், உதவிகள் வேண்டும் என, மாவட்ட நல அலுவலரிடம், போனில் கோரிக்கை விடுத்திருந்தனர்.



இதையடுத்து, நேற்று தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில், 50 மாற்றுத் திறனாளிகளுக்கும், சமூக இடைவெளியியை கடைப்பிடித்து, மளிகை தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.இது குறித்து, மாவட்ட நல அலுவலர் கூறுகையில், ''ஊரடங்கில், மாற்றுத்திறனாளிகள் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களை தேடி சென்று, உதவிகள் செய்து வருகிறோம். தினமும், பல்வேறு பகுதிகளில் இருந்து, கோரிகை விடுக்கின்றனர். ''இது குறித்து, தாலுகா வாரியாக விசாரித்து, நிவாரணம் வழங்கி வருகிறோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X