மாவட்டத்தில் உளுந்து அறுவடை விவசாயிகள் கவலை: விளைச்சலும் இல்லை விலையும் இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 மே
2020
08:19
பதிவு செய்த நாள்
மே 28,2020 03:38

கடலுார் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் பகுதியில் கீழணை மற்றும் வீராணம் பாசனம் மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.



இப்பகுதியில் முப்போகம் விளைந்த நிலைமாறி தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தற்போது ஒரு போகம் விவசாயம் செய்வதே குதிரை கொம்பாக உள்ளது.ஆனாலும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளவர்கள், கடன் பட்டாவது விவசாயம் செய்து வருகின்றனர்.கடும் போராட்டத்திற்கிடையே கடந்த ஆண்டு சம்பா பருவ சாகுபடியை முடித்த விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.



ஆனாலும் அடுத்து உளுந்து கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உளுந்து விதைத்தனர். உளுந்து சாகுபடியில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பூச்சி தாக்குதல் காரணமாக உளுந்து விளைச்சல் முற்றிலும் குறைந்தது. ஏக்கருக்கு 5 மூட்டை கிடைக்க வேண்டிய இடத்தில் 3 மூட்டை கிடைப்பதே அரிதாக இருந்தது. இதனால் கடைமடை விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அறுவடை முடியும் நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் விளைவித்த உளுந்து பயிரை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தனியார் வியாபாரிகள் உளுந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.அரசு சார்பில் கடந்த ஆண்டு காட்டுமன்னார்கோவிலில் உளுந்து பயிரை வாங்க கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்தாண்டு திறக்கப்படவில்லை.ஊரடங்கு பாதிப்பால் கையில் பணம் இன்றி தவித்த விவசாயிகள் வேறு வழியின்றி வந்த விலைக்கு தனியாருக்கு உளுந்தை விற்பனை செய்கின்றனர்.



ஏற்கனவே சம்பா அறுவடையில் பாதித்த விவசாயிகள் உளுந்து பயிருக்கும் நல்ல விலை கிடைக்காமல் கவலையடைந்துள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் உளுந்து கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு உரிய விலை கொடுத்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X