| வனத்துறை அலுவலகத்திற்கு பாம்புடன் வந்த வாலிபர்கள் Dinamalar
வனத்துறை அலுவலகத்திற்கு பாம்புடன் வந்த வாலிபர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மே
2020
03:47

விருத்தாசலம்; விருத்தாசலம் வனத்துறை அலுவலகத்திற்கு கட்டு விரியன் பாம்புடன் வந்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. .விருத்தாசலம் அடுத்த தீவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரநாதன், இவரது வீட்டின்பின்புறம் உள்ள தோட்டத்தில், நேற்று பகல் 12:00 மணியளவில், கட்டு விரியன் பாம்பு ஒன்று வந்தது. இதைப்பார்த்த அவர் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வராததால், சிதம்பரநாதன் மகன் முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் தமிழ்மணி பாம்பை லாவகமாக பிடித்து, பெரிய சாக்கு பையில் போட்டு, தீயணைப்பு நிலையத்திற்கு ஒப்படைக்க வந்தனர்.ஆனால், தீயணைப்பு அதிகாரிகள், தற்போது எங்களை பாம்பு பிடிக்க போக கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே, நீங்களே காப்பு காட்டில் பாம்பை விட்டு விடுங்கள் என அலட்சியமாக கூறினர். செய்வதறியாது நின்ற இளைஞர்களிடம், வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒருவர் கூறினார். அதை தொடர்ந்து பாம்புடன் வனத்துறை அலுவலகத்திற்கு இளைஞர்கள் சென்றனர். அங்கு அலுவலகம் பூட்டிக் கிடந்தது. பின்னர், அரைமணி நேரம் காத்திருந்த இளைஞர்கள், வனத்துறை அதிகாரிகள் வந்ததும், அவர்களிடம் பாம்பை ஒப்படைத்தனர். அதிகாரிகள், தங்கள் ஜீப்பில், இளைஞர்களை அழைத்துக்கொண்டு, கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் பாம்பை விட்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X