| ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி Dinamalar
ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மே
2020
03:52

ஸ்ரீமுஷ்ணம்; காட்டுமன்னார்கோவில் பகுதி ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் வாடகை பாத்திர உரிமையாளர்களுக்கு எம்.எல்.ஏ., முருகுமாறன் நிவாரண உதவி வழங்கினார்.ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வரும் ஒலி, ஒளி அமைப்பாளர்கள், வாடகை பாத்திர நிலையம், வாடகைக்கு டெக்ரேஷன் செய்பவர்கள் உட்பட 115 குடும்பங்களுக்கு காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் தமது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி, நேற்று நடந்த நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த 115 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார். இதில், ஒன்றிய செயலர் வாசு முருகையன், நகர செயலர் எம்.ஜி.ஆர்.தாசன், வீரானந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பாலசந்தர், நகர பொருளாளர் வசந்தகுமார், ஒலி, ஒளி அமைப்பாளர் சங்க நிர்வாகிகள் தென்னவன், சம்பத், கல்யாணசுந்தரம், கருணாகரன், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் துரை, ராம்குமார், ரமேஷ், ரூபி பாஸ்கர், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X