| நீட் இலவச பயிற்சிக்கு படப்பிடிப்பு Dinamalar
நீட் இலவச பயிற்சிக்கு படப்பிடிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 மே
2020
23:47

விருதுநகர்:அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீட், ஜே.இ.இ., தேர்வு இலவச பயிற்சிக்கான படப்பிடிப்பு விருதுநகரில்துவங்கியது.



இதை துவக்கி வைத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசியதாவது: இத் தேர்வுகளை அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள வசதியாக கணிதம், தாவரவியல், விலங்கியல், உயிரியியல் பிரிவு வல்லுனர்கள் மூலம் தினமும் காலை 9:30 முதல் பகல் 12:30, பகல் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.



நுழைவு தேர்வுகள் துவங்கும் வரை ஒளிபரப்பப்படும், என்றார். ஊடக ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் உடனிருந்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X