வந்தார்கள்...சென்றார்கள்! வடமாநில தொழிலாளர்கள்...வாடி நிற்கின்றன தொழில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

30 மே
2020
01:50
பதிவு செய்த நாள்
மே 30,2020 01:31

கோவை: வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல துவங்கியதால், கோவை தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வேலையாட்கள் இல்லாமல், பவுண்டரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.கோவையில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் ஜவுளி, இன்ஜினியரிங், கட்டுமான தொழில்களில் வேலை பார்த்து வந்தனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்று விட்டனர்.


இன்னும் சொற்பம் பேர் மட்டுமே இங்குள்ளனர்.பவுண்டரிகளில் பாதிப்புவெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவது, கோவை தொழில் நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தளர்வுக்குப் பின், தொழிலை துவங்கிய நிலையில், ஆட்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது.கடந்த 10 ஆண்டுகளாக, பவுண்டரிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் மட்டுமே, வேலை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது அவர்கள் இல்லாததால், பவுண்டரிகளில் பணி பாதிக்கப்பட்டுள்ளது.


இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்களிலும், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜவுளி தொழில் நிறுவனங்களில், ஓரளவே பாதிப்பு உள்ளது. அனைத்து வசதிகளையும் மில்கள் செய்து கொடுத்திருப்பதால், இன்னும் பாதி பேர் உள்ளனர்.கட்டுமான தொழிலில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள், அதிக அளவில் வெளியேறியதால் கட்டுமான தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன.


இலவச ரயிலை நிறுத்தினால், தொழிலாளர்கள் செல்வது குறையும். வேலையில் தொழிலாளர்கள் கவனம் செலுத்துவர் என்கின்றனர் தொழில் துறையினர். வேலையில்லாமல் இருக்கும் பிற மாவட்டத்தவர், கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களை அணுக, அரசு ஏற்பாடு செய்தால், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, நம்மூர் தொழில்களும் பாதிக்கப்படாது. முன்வருமா அரசு?'பல தொழில்கள் பாதிக்கப்படும்'தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) துணைத்தலைவர் கார்த்திக் கூறுகையில், ''வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதால், பவுண்டரிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


இரும்பை உருக்கி எடுத்து, வார்ப்படங்களை தயார் செய்வதில், இந்த தொழிலாளர்கள் மட்டுமே, ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பற்றாக்குறை கோவையில் உள்ள, பல தொழில்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இலவசமாக சொந்த ஊருக்கு பயணம் செய்ய அரசு வசதி செய்து தந்திருப்பதால், வேலையை துாக்கி போட்டு விட்டு, நண்பர்களுடன் ஒரு 'டூர்' போல் கிளம்பி விடுகின்றனர்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
02-ஜூன்-202002:34:58 IST Report Abuse
kumzi இங்கிருந்துக் கொண்டு கூவும் ஓசி கோட்டர் ஓசி பிரியாணி கூட்டம் என்ன செய்யுது
Rate this:
Cancel
Madhav - Chennai,இந்தியா
01-ஜூன்-202017:06:11 IST Report Abuse
Madhav தொழில்துறை கொத்தடிமைகளை விரும்புவது இயல்பு மனிதம் செத்துப் போகும் என்பதை சாலையில் அலைந்த அந்த தொழிலாளர்களை பார்த்தபின் உணரலாம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஜூன்-202003:56:03 IST Report Abuse
J.V. Iyer வெளிமாநிலத்தவர்களை நல்ல முறையில் நடத்தினால் ஏன் திரும்ப போகப்போகிறார்கள்? மேலும், அவர்கள் குடும்பங்கள் என்ன நிலைமையில் உள்ளதோ? தனியாக இல்லாமல் அவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்தால் அவர்கள் திரும்ப போக வாய்ப்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X