| பேக்கரி கட்டடம் இடிந்து விழுந்தது Dinamalar
பேக்கரி கட்டடம் இடிந்து விழுந்தது
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 மே
2020
04:39

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், திடீரென பேக்கரி கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி - கோவை ரோட்டில், விஷ்ணுகுமார் பேக்கரி செயல்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த சப்தத்துடன் பேக்கரி கட்டடம் இடிந்து விழுந்தது.கட்டடம் இடிந்து விழுவதை கண்டு, அங்கு இருந்த மக்கள், உயிர் பயத்தில் தப்பியோடினர். பேக்கரியில் இருந்த பொருட்கள் மற்றும் பேக்கரி முன் நிறுத்தப்பட்ட வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின.தகவல் அறிந்த தீயணைப்பு துறை நிலை அலுவலர் புருேஷாத்தமன், கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.பேக்கரி பூட்டிய பின், கட்டடம் விழுந்ததால், ஊழியர்கள், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X