மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2020
22:27

திருப்போரூர் : குடி போதையில் மனைவியை அடித்து கொலை செய்து, இயற்கையாக இறந்ததாக நாடகமாடிய கணவரை, போலீசார் நேற்று, கைது செய்தனர்.



திருப்போரூர் பேரூராட்சி, புதுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன், 30, பன்றி வளர்ப்பு தொழில் செய்தார். இவரது மனைவி கனிமொழி, 26. இவர்களுக்கு, 9 வயது மகள், 6 வயது மகன், 10 மாத ஆண் குழந்தை உள்ளது.முருகன், தினமும் குடித்து, மனைவியை அடிப்பது வழக்கம் என, கூறப்படுகிறது. நேற்று முன்தினமும், குடி போதையில், கனிமொழியிடம் சண்டையிட்டார்.பின், ஆத்திரத்தில், வீட்டில் கிடந்த மரக்கட்டையால், தலை உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழியை தாக்கினார். இதில் அவர் இறந்து விட்டார். இதையடுத்து முருகன், குளிர்சாதன சவப்பெட்டியை நேற்று எடுத்து வந்து, கனிமொழியின் சடலத்தை வீட்டில் வைத்துள்ளார்.



இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, திருப்போரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின், முருகனிடம் விசாரணை நடத்தியதில், குடி போதையில் மனைவியை கொலை செய்ததும், இயற்கையான முறையில் கனிமொழி இறந்து போனதாக நாடகம் ஆடியதும், போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, முருகனை, போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Krishnaswami - Chennai,இந்தியா
31-மே-202005:46:04 IST Report Abuse
Swaminathan Krishnaswami திரு எடப்பாடி அவர்ஹலே, இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X